»   »  ‘சர்ச்சை’ நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்... கத்தார் ஹோட்டல் ஊழியரை மணந்தார்!

‘சர்ச்சை’ நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்... கத்தார் ஹோட்டல் ஊழியரை மணந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: இயக்குநர் ரவிக்குமாருடன் காதல், திருமணம் பின்னர் விவாகரத்து எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சுஜிபாலா கத்தாரில் நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊட்டியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுஜிபாலா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சினிமா நடிகையானார்.

அய்யா வழி, முத்துக்குமுத்தாக, சந்திரமுகி, கோரிபாளையம் போன்ற பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

திருமண சர்ச்சை...

திருமண சர்ச்சை...

இந்நிலையில், உண்மை என்ற படத்தில் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துக் கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார் சுஜிபாலா. இது தொடர்பாக ரவிக்குமார் பல்வேறு ஆதாரங்களை ஊடகங்களுக்கு வழங்கினார்.

போலீசில் புகார்...

போலீசில் புகார்...

ஆனால், இதனை மறுத்த சுஜிபாலா, ‘ரவிக்குமார் பொய் சொல்வ தாகவும் தன் மீது ‘ஆசிட்' வீசுவதாக கூறி மிரட்டுவதாகவும்' போலீஸில் புகார் அளித்தார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

ஊட்டி மாப்பிள்ளை...

ஊட்டி மாப்பிள்ளை...

இந்நிலையில், சுஜிபாலாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அதன்படி ஊட்டியை சேர்ந்த பிரனேஷ் என்பவர் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டார். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர், கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.

சர்ச்சில் திருமணம்...

சர்ச்சில் திருமணம்...

சுஜிபாலா - பிரனேஷ் திருமணம் நேற்று நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள சர்ச்சில் நடைபெற்றது. சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடையும், மணமகன் பிரனேஷ் கோட்-சூட்டும் அணிந்திருந்தனர்.

வாழ்த்து...

வாழ்த்து...

பங்கு தந்தை லியோன் கென்சன் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகை சுஜிபாலா கழுத்தில் பிரனேஷ் தாலி கட்டியதும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

பெயர் மாற்றம்...?

பெயர் மாற்றம்...?

பிரனேஷைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுஜிபாலா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தனது பெயரை சுஜிதா எனவும் அவர் மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Tamil actress Sujibala married a star hotel staff in Nagerkovil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil