twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மொழி தெரியும், இந்த மொழி தெரியும்.. தாய் மொழி தெரியலையே.. லாக்டவுனில் பாடம் கற்கும் தமன்னா!

    By
    |

    சென்னை: லாக்டவுனில் தனது தாய்மொழியை கற்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

    'கேடி' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத் தொடர்ந்து வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார்.

    பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன.

    "தாயில்லாமல் நானில்லை" முதல் "நூறு சாமிகள் இருந்தாலும்" வரை.. சினிமாவில் அசத்திய 'அம்மா'பாடல்கள்!

    ஹிம்மத்வாலா

    ஹிம்மத்வாலா

    தனுஷின் படிக்காதவன், சூர்யாவின் அயன், கார்த்தியின் பையா, விஜயின் சுறா, அஜித்தின் வீரம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழைப் போலவே தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார்.

    பாலிவுட் சினிமா

    பாலிவுட் சினிமா

    இந்தப் படம் பிளாப் ஆனது. இதையடுத்து சைஃப் அலிகான் ஜோடியாக ஹம்ஷகல்ஸ் படத்தில் நடித்தார். இந்தப் படமும் பிளாப் ஆனது. இதனால் பாலிவுட்டில் அவரை ராசியில்லாத நடிகை என்று கூறிவந்தனர். இதுபற்றி முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், ‘நடிப்பது என் வேலை. படங்களின் தோல்விக்கு நடிகர், நடிகைகள் பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால், இது கடினமானதுதான்' என்று கூறியிருந்தார்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இந்நிலையில் இப்போது தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ள தமன்னா, இந்தியில் நவாஸூதின் சித்திக் ஜோடியாக போலே சுடியன், தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக சீட்டிமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

    தாய் மொழி

    தாய் மொழி

    மும்பையில் பிறந்து வளர்ந்த தமன்னா, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நன்றாக பேசக் கற்றுக்கொண்டார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே டப்பிங் பேசுகிறார். நடிகை தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது.

    சிந்தி மொழி கற்கிறார்

    சிந்தி மொழி கற்கிறார்

    வீட்டில் அம்மாவும் அப்பாவும் சிந்தி மொழியில் பேசுவதை வேடிக்கப் பார்ப்பதோடு சரி. சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால், இந்த லாக்டவுனில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்க இருக்கிறார். மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

    English summary
    Tamannaah has now decided to learn her mother tongue Sindhi language.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X