Tamannah: இன்னொரு நடிகையுடன் சுற்றும் விஜய் வர்மா.. நெத்தியடி பதில் கொடுத்த தமன்னா!
சென்னை: நடிகை தமன்னா தற்போது பான் இந்தியா ஸ்டார். அவர் வெளியில் தென்படுகிறார் என்றாலே அது செய்தியாக மாறிவிடுகிறது. இப்படி இருக்கையில் அவரது பிரேக் அப் குறித்து சொல்லவே வேண்டாம். ஏற்கனவே தமிழில் ஒரு முன்னணி நடிகருடன் அவர் காதலில் இருந்ததாகவும், அதன் பின்னர் அது திருமணத்தில் முடியாததால் பிரிந்து விட்டதாகவும் பேச்சுக்கள் உள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருக்கிறார் என தகவல்கள் வந்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் வர்மா வேறு ஒரு நடிகையுடன் தற்போது டேட் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு தனது ஸ்டைலில் நெத்தியடி பதிலைக் கொடுத்துள்ளார்.
தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் நடித்த போது நடிகர் விஜய் வர்மா உடன் ஏற்பட்ட பழக்கம், அதன் பின்னர் காதலாக மாறியது. இருவருக்கும் அடிக்கடி ஒன்றாக இணைந்து ஊர் சுற்றிக் கொண்டு இருந்தார்கள். லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸ் வெளியான பின்னர் அவர் பேசுகையில், " லஸ்ட் ஸ்டோரீஸ் சீரிஸில் நடிப்பதற்கு விஜய் வர்மா மிகவும் உதவியாக இருந்தார். படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது, விஜய் வர்மா என்னை மிகவும் சௌகரியமாக உணர வைத்தார். அதனால் தான் படுக்கை அறைக் காட்சிகளில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற வகையில் என்னால் நடிக்க முடிந்தது.

விஜய் வர்மா: படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது நம்முடன் நடிக்கும் நடிகரின் ஒத்துழைப்பு ஒவ்வொரு நடிகைக்கும் மிகவும் முக்கியம். அப்போது தான் இயக்குநர் எதிர்பார்த்தபடி, கதைக்கு ஏற்றபடி நடிக்க முடியும். விஜய் வர்மா அந்த வகையில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். படுக்கை அறைக் காட்சியில் நடிக்கும் போது நாம் மிகவும் பாதுகாப்பாக உணரும் போது மட்டுமே நம்மால் கதைக்கு ஏற்ற வகையில் நடிக்க முடியும்.
படுக்கை அறைக் காட்சி: நான் இதற்கு முன்னர், விஜய் வர்மாவை போல மற்றொரு நடிகரிடம் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. அதுதான் ஒரு நடிகருக்கு மிகவும் முக்கியமானது என்று விஜய் வர்மா தன்னுடன் படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது எந்த அளவுக்கு ஒத்துழைப்பில் இருந்தார் என்பது குறித்து தெரிவித்திருந்தார். இருவரும் காதலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமன்னா நெத்தியடி: இவர்கள் காதல் திருமணத்தில் முடியும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், காதல் பிரிவில் முடிந்தது. இந்நிலையில் விஜய் வர்மா தற்போது மற்றொரு இளம் நடிகையான தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் உடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இருவரும் டேட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னா அண்மையில் அளித்த பேட்டியில், இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதாவது உங்களது முன்னாள் காதலர் வேறு ஒரு நடிகையுடன் ஊர் சுற்றி வருகிறாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். இவரது பதிலை கேட்ட பலரும், இவர்களின் பிரிவு பெரிய சண்டையின் முடிவாக எடுத்திருப்பார்கள் போல, அதனால்தான் தமன்னா இப்படியான பதில் அளித்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











