படப்பிடிப்பு தளத்தில் நடிகை தற்கொலை..வசமாக சிக்கிய காதலன்.. திடுக்கிடும் தகவல்!

டெல்லி : படப்பிடிப்பில் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துனிஷா சர்மா பாரத் கா வீர் புத்ரா என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்,

ஃபிதூர், பார் பார் தேக்கோ, கஹானி 2: துர்கா ராணி சிங், தபாங் 3 உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நடிகை துனிஷா சர்மா

நடிகை துனிஷா சர்மா

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் என்ற இடத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது அப்போது, நடிகை துனிஷா சர்மா, தேனீர் இடைவேளையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால், படக்குழுவினர் கழிவறையின் கதவை தட்டியுள்ளனர். அப்போதும் எந்தவிதமான சத்தமும் வராததால், சந்தேகம் அடைந்த படக்குழுவினர் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நடிகை துனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன

தற்கொலைக்கான காரணம் என்ன

இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது பிரேத பரிசோதனை இன்று அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனையில் நடத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நடிகை தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து எந்த பொருளும் கிடைக்காததால், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

சக நடிகருடன் உறவில் இருந்தார்

சக நடிகருடன் உறவில் இருந்தார்

நடிகை துனிஷா சர்மாவின் தாய், சக நடிகரான ஷீசன் முகமது கான் தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று புகார் அளித்துள்ளார். ஷீசன் முகமது கானுடன் தனது மகள் உறவில் இருந்ததாகவும், இதனால், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறிய புகாரை அடுத்து, மும்பை போலீசார் நடிகர் ஷீசனை, ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்தனர். ஷீசன் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

மேலும், நடிகை துனியா சர்மாவுக்கும், காதலன் ஷீசனுக்கும் இடையே சில நாட்களாக சண்டை இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலருடன் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X