»   »  மிஸ் யூனிவர்ஸ் பட்டம் போனா என்ன.. கவலைப்படலை... ஊர்வசி ராதெலா "கூல்"!

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் போனா என்ன.. கவலைப்படலை... ஊர்வசி ராதெலா "கூல்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் வேகாஸ்: எனது கருத்துக்கள் யாரையாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை ஊர்வசி ராதெலா தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகி 2015க்கான போட்டியில் இந்தியா உட்பட சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஆனால் நடுவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார் என்று ஊர்வசி ராதெலா கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று ஊர்வசி ராதெலா தற்போது மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகி

2015 ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகித் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது இதில் பிரபஞ்ச அழகியாக பியா தேர்வாகியிருந்தும் நிகழ்ச்சியை நடத்திய நடிகர் ஸ்டீவ் ஹார்வே கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார். இதனால் முதலில் அரியாத்னாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பின்னர் அதை வாங்கி பியாவுக்கு சூட்டினர். கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஹார்வே பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஊர்வசி ராதெலா

ஊர்வசி ராதெலா

இந்தியா சார்பாக கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஊர்வசி ராதெலாவால் முதல் 15 இடங்களுக்குள் கூட வரமுடியவில்லை.இதனால் இந்த வருடமும் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை இந்தியா வெல்ல முடியமால் போனது. கடைசியாக நடிகை லாரா தத்தா கடந்த 2௦௦௦ மாவது ஆண்டில் இந்தப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒருதலைப்பட்சமாக

ஒருதலைப்பட்சமாக

இந்நிலையில் நடிகை ஊர்வசி ராதெலா அடுத்த பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெறும் இடம் பிலிப்பைன்ஸ் என்பதால் நடுவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். நடிகை ஊர்வசி ராதெலாவின் இந்தக் குற்றச்சாட்டு பிரபலமான மிஸ்ஸலாஜி இணையதளத்தில் வெளியானது.

மறுப்பு

மறுப்பு

தற்போது தான் அப்படிக் கூறவில்லை நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்று ஊர்வசி ராதெலா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். மேலும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் தோற்றதற்காக நான் வருத்தப்படவில்லை. எனது மனதில் தோன்றியதை சொன்னேன். எனது கருத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து மிஸ்ஸாலஜியிடமிரு்து ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன்.

அழகான நினைவுகள்

அழகான நினைவுகள்

இங்கு எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். இங்கிருந்து நான் இந்தியா திரும்பும் போது என்னுடன் இந்த அழகான நினைவுகளை நான் எடுத்துச் செல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

15 ஆண்டுகளாக

15 ஆண்டுகளாக

லாரா தத்தாவுக்கு பிறகு 15 ஆண்டுகளாக இந்திய அழகிகள் யாரும் பிரபஞ்ச அழகியாக தேர்வாகவில்லை. வருடம் தவறாமல் போட்டியில் கலந்து கொண்டாலும் இந்திய அழகிகளால் பிரபஞ்ச அழகி கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: miss universe, அழகி
English summary
Bollywood Actress Urvashi Rautela clear her stand on Miss Universe Pageant. she said, " I Don't Regret Losing the Title, in Miss Universe 2015".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil