»   »  பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்... வாணி விஸ்வநாத் மீண்டு(ம்) வருகிறார்

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்... வாணி விஸ்வநாத் மீண்டு(ம்) வருகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை வாணி விஸ்வநாத் மீண்டும் நடிக்க வருகிறார் என்று திரையுலகில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

பிறப்பால் மலையாளி என்றாலும் சென்னையில் பிறந்தவர் வாணி விஸ்வநாத் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்று சகல மொழிகளிலும் ஒரு காலத்தில் இவரின் கொடி உச்சத்தில் பறந்தது.

Actress Vani Viswanath Comeback

தமிழில் விஜயகாந்தின் பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் 'பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம்' பாடலுக்கு ஆடியவர் தொடர்ந்து தாய் மேல் ஆணை, நல்லவன் உள்ளிட்ட சில படங்களுடன் தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் வாணி விஸ்வநாத் மலையாள உலகில் மிகவும் பிரபலமான நடிகை. குறிப்பாக ஆக்க்ஷன் படங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

2002 ம் ஆண்டில் மலையாள காமெடி நடிகரும் இயக்குனருமான பாபுராஜைக் காதலித்து மணந்து கொண்டார். தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க வாணி விரும்புகிறாராம்.

இதனால் அவரின் அன்புக் கணவர் பாபுராஜ் தான் இயக்கும் புதிய படத்தை மனைவிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எடுத்து வருகிறார்.

கணவர் இயக்கும் படத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் வாணி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாக்களில் ரசிகர்கள் வாணி விஸ்வநாத்தைப் பார்க்கலாம் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

2005 ம் ஆண்டில் வெளியான இதயத் திருடன் படத்தில் வாணி விஸ்வநாத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vani Viswanath the action heroine of Mollywood, will make her comeback with husband Baburaj's next directorial venture. Vani will be playing a police officer in the movie. She has also committed a Telugu project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil