For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீயே ஒரு பிராடு.. கிழிப்பே நீ.. முதல்ல உன் புருஷன சேர சொல்லு.. கஸ்தூரியையும் கிழித்து விட்ட வனிதா!

  |

  சென்னை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சரமாரியாக விளாசி தள்ளிய வனிதா விஜயக்குமார் நடிகை கஸ்தூரியையும் கண்டப்படி பேசி வெளுத்து வாங்கியுள்ளார்.

  வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

  நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனை லைவ் நிகழ்ச்சி என்றும் பார்க்காமல் அவளே இவளே என பேசினார் வனிதா. அநாகரிகத்தின் உச்சமாக பல கெட்ட வார்த்தைகளையும் பேசினார்.

  அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் அவரை தரக்குறைவாக பேசினார். இதனை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டிவிட்டினார் கஸ்தூரி. அதற்காக அவரையும் விளாசியுள்ளார் வனிதா.

  ஆமா நீ என்னை பூட்டிதான் வச்சிருக்க.. வனிதாவுக்கு ஊட்டிவிட்டு ரொமான்ஸ் செய்த பீட்டர் பால்!ஆமா நீ என்னை பூட்டிதான் வச்சிருக்க.. வனிதாவுக்கு ஊட்டிவிட்டு ரொமான்ஸ் செய்த பீட்டர் பால்!

  கொஞ்சம் ஓய்வெடுங்கள்

  கொஞ்சம் ஓய்வெடுங்கள்

  நடிகை கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டிவிட்டியிருந்தார். அதில், என்னுடைய இதயம் உங்களுக்கு ரத்தம் சிந்துகிறது. தயவுசெய்து குழாயடி சண்டை மக்களிடம் ஈடுபட வேண்டாம். வனிதா உங்களையே நீங்கள் மோசாக்கி கொள்கிறீர்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

  அவரை கைது செய்யலாம்

  அவரை கைது செய்யலாம்

  சட்ட நிலைப்பாடு- நயவஞ்சக வனிதா இணைய துஷ்பிரயோகம், ஒரு பெண்ணின் தாக்கி பேசியதோடு அவதூறும் செய்திருக்கிறார். தன்னை அவதூறாக பேசியதாக சூர்யாதேவி மீது போலீஸில் புகார் அளித்தார். மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது அதே குற்றத்தை செய்துள்ளார். அவரை கைது செய்யலாம் என பதிவிட்டார்.

  உனக்கே வாழ்க்கையில்லை

  உனக்கே வாழ்க்கையில்லை

  இதனால் கடுப்பான வனிதா, கஸ்தூரி நீ எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை கொடு.. உனக்கே வாழ்க்கையில்லை, நீ அவருக்கு ஃபினான்சியலா சப்போர்ட் பண்ண போறீயா? ஒரு குடிக்கார, பொம்பளை பொறுக்கி கணவர் எதற்கு அவருக்கு தேவை.. அவருக்குதான் நீயும் தமிழ்நாடும் இருக்கிறதே. மதர் மேரி மாதிரி பேசுகிறாய் என பதிவிட்டிருந்தார்.

  அவரை ஆதரிப்பேன்..

  அவரை ஆதரிப்பேன்..

  அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, நான் அதை யூடியூப்பில் விற்காததால் எனக்கு வாழ்க்கை இல்லை என்று கருத வேண்டாம். நான் மற்றவர்களின் வாழ்க்கைத் துணையைத் திருடி, டீன் ஏஜ் திருமண கனவுகளை நாற்பது வயதில் மறுபரிசீலனை செய்யவில்லை. ஆம், நான் அவளை எல்லா வகையிலும் ஆதரிப்பேன், மிக முக்கியமாக, சட்டபூர்வமாக என பதிவிட்டிருந்தார்.

  நீயே ஒரு பிராடு..

  நீயே ஒரு பிராடு..

  இதனை பார்த்த வனிதா, நீயே ஒரு பிராடு, லீகலா கிழிப்பே நீ.. உன் லைஃப் பத்தி எனக்கு தெரியும்.. லீகலா புருஷன அவங்கக்கூட சேர்த்து வைக்கப்போறீயா.. முதல்ல உன் புருஷன உன் கூட சேர சொல்லு என தரம் தாழ்ந்து டிவிட்டியுள்ளார்.

  டிராமா பண்ணாதே..

  டிராமா பண்ணாதே..

  மேலும் மற்றொரு பதிவில் போலியான சட்ட வாழ்க்கையைத் தொடங்க உங்களுக்கு ஒரு வழக்கு தேவை.. எனவே ஒரு முறையான சட்ட ஆலோசகரைப் போல நடிக்கிறாய். உனக்கு இதயமே இல்லை. நீங்கள் எல்லாம் இரத்தத்தை உறிஞ்சும் மிருகங்கள். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சூழ்நிலையாக இருக்கும்போது, அது சட்டம் ஒழுங்குடன் போக வேண்டும். டிராமா பண்ணாதே என பதிவிட்டுள்ளார்.

  காமெடி பீஸ்..

  காமெடி பீஸ்..

  தொடர்ந்து கஸ்தூரியை கண்டப்படி பேசி வருகிறார் வனிதா. உனக்கு என்னை பார்த்து பொறாமை என்றும் விளாசி வருகிறார். மேலும் நான் அந்த முட்டாள் கஸ்தூரியை டிவிட்டரில் இருந்தும் என் வாழ்க்கையில் இருந்தும் பிளாக் செய்கிறேன். அவர் பாட்டுக்கு உளறிக் கொண்டிருக்கட்டும். அது அதற்குதான் லாயக்கு.. காமெடி பீஸ் என பதிவிட்டுள்ளார்.

  வேஸ்ட் பீஸ்.. ஓடி போடி..

  வேஸ்ட் பீஸ்.. ஓடி போடி..

  பிக்பாஸ் தமிழ் 3 மொக்க பீஸ் ஆச்சு.. அங்கே மானம் போச்சு.. இங்கே வந்து புதுசா சீன் போடுது.. ஜீரணிக்க முடியாது விஷ ஜந்து.. என்றும் கஸ்தூரியை அநாகரிகமாக பேசியுள்ளார். மேலும் உண்மையிலேயே நீ ஒரு வேஸ்ட் பீஸ்.. ஓடி போடீ.. உன் ஒரிஜினல் வேலைய பாரு.. என்றும் சாடியிருக்கிறார்.

  English summary
  Actress Vanitha and Kasthuri fights on twitter. Vanitha has said Kasthru is a fraud.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X