»   »  விஷால், தனுஷ், விஜய் படங்களுக்குப் பிறகு வரலட்சுமியின் என்ட்ரி.. வெல்வெட் நகரம் !

விஷால், தனுஷ், விஜய் படங்களுக்குப் பிறகு வரலட்சுமியின் என்ட்ரி.. வெல்வெட் நகரம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil
வரலக்ஷ்மி மற்றும் அமீர் கான் பற்றிய தகவல்கள்- வீடியோ

சென்னை : நடிகை வரலட்சுமி தற்போது தனுஷின் 'மாரி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி 'தாரை தப்பட்டை' படத்தின் நடிப்புக்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி. இப்படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

தற்போது தனுஷின் 'மாரி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2, 'விஜய்யின் 62-வது படம் உள்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர், அடுத்தாக 'வெல்வெட் நகரம்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறு நடிப்பால் இளைஞர்களைக் கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு வெகுவான பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

சண்டக்கோழி 2

சண்டக்கோழி 2

தற்போது 'மாரி 2', 'கன்னிராசி', 'பாம்பன்', 'நீயா 2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'சண்டக்கோழி 2' விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் வரலட்சுமி சரத்குமார் பிஸியாக நடித்து வருகிறார்.

வெல்வெட் நகரம்

வெல்வெட் நகரம்

இந்நிலையில், 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி. இப்படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.

English summary
Actress Varalaxmi is currently busy with films including Dhanush's 'Maari 2' and Vishal's 'Chandakozhi 2'. In this case, Varalaxmi has been signed to act in 'Velvet Nagaram'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X