Just In
- 17 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 29 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிரபல வாரிசு நடிகை பரபர.. ஷாக்கில் கோலிவுட்!
சென்னை: பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வரவேண்டும் என பிரபல வாரிசு நடிகை கூறியிருப்பது தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ளது. ஹாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது.
நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை அறிவிக்க ஆரம்பிக்கப்பட்டதான் மீடூ. இதில் முதன் முதலில் பாலியல் தொல்லைகளை கூறியவர்கள் பாலிவுட் நடிகைகள் தான்.

முன்னணி வாரிசு நடிகை
இதனை தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என இந்தியா சினிமாவின் அத்தனை மொழி நடிகைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்தனர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார், பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

போடா போடி
வரலட்சுமி சரத்குமார் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வரலட்சுமி, நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

வில்லியாக..
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்துள்ளார் வரலட்சுமி. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வரலட்சுமி.

பாலியல் தொல்லை
பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பை அமையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை துணிச்சலாக கூறியிருக்கிறார்.

படுக்கைக்கு அழைப்பு
தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசிய ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி.

அதிர்ச்சியில் தமிழ் சினிமா
சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். பெண்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையான வரலட்சுமி இப்படி ஒரு புகாரை கூயிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.