»   »  டாஸ்மாக்கில் பீர் பாட்டிலுடன் நடிகை வரலட்சுமி!

டாஸ்மாக்கில் பீர் பாட்டிலுடன் நடிகை வரலட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
குடிக்கலாமா? வேண்டாமா? குழப்பத்தில் தவிக்கும் வரலஷ்மி சரத்குமார் !!- வீடியோ

சென்னை : விமலுக்கு ஜோடியாக 'காதல் மன்னன்' படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்றும் ஆரம்பம் முதல் கடைசி வரை விமல், வரலட்சுமி காமெடி காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி உதவியாளர் முத்துக்குமரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கேரள எல்லைகளிலும், சென்னையைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Actress varalaxmi with beer bottle

இந்நிலையில், வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதில் வரலட்சுமி மற்றும் விமல் ஆகியோர் டாஸ்மாக்கில் ஒரு பீர் பாட்டிலை வைத்திருப்பது போல உள்ளது. 'காதல் மன்னன்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

"குடிக்கலாமா... வேண்டாமா... முடிவெடுக்கும் நேரம்" எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் வரலட்சுமி. அவரது ட்வீட்டுக்கு சிலர் "ஒரே கல்ப்பா எடுத்து அடிச்சிடுங்க" என கமென்ட் போட்டிருக்கிறார்கள்.

English summary
Varalakshmi has posted a photo on her Twitter page. In this photo, Varalaxmi and Vimal have a beer bottle in Tasmac. This photo is taken in the shooting spot of 'Kaadhal mannan'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X