»   »  திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை

திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் வீணா மாலிக். கன்னட படம் ஒன்றிலும் நடித்துள்ளார். பிரபல பத்திரிகைக்கு டாப்லெஸாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

அவர் கடந்த 2013ம் ஆண்டு தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டக் என்பவரை திருமணம் செய்தார்.

துபாய்

துபாய்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய வீணா கணவருடன் துபாயில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஆப்ராம்(2), அமல்(1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து

விவாகரத்து

கணவருக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இனியும் சேர்ந்து வாழ முடியாது என்பதால் விவாகரத்து அளிக்குமாறும் கோரி வீணா லாகூர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.

ஆசாத்

ஆசாத்

விவாகரத்து வழக்கில் வீணாவின் கணவர் ஆசாத் நேரில் ஆஜராகவில்லை. மேலும் விவாகரத்து மனு குறித்து பதில் அளிக்கவும் இல்லை. இதையடுத்து வீணாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிப்பு

நடிப்பு

வீணாவும், கணவரும் கடந்த மூன்று மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. வீணாவுக்கு மீண்டும் நடிக்க ஆசையாம். ஆனால் அவர் கணவரோ குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்குமாறு கூறினாராம். இதனால் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம்.

English summary
Pakistani actress Veena Malik has ended her three-year-old marriage with Asad Khattak after a family court in Lahore granted them divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil