Don't Miss!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- News
ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Technology
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் நிகழ்ச்சியா வேணவே வேணாம்பா.. அலறியடித்து ஓடும் வித்யூலேகா!
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார இறுதியில் இதன் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.
இதில் இறுதிப்போட்டியில் 6 பேர் கலந்துக் கொண்டனர். இதில் வித்யூலேகாவும் ஒருவர்.
இவர் தற்போது தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மன்னிப்பு
கேட்க
சொன்ன
குக்
வித்
கோமாளி
சுனிதா..
எதுக்காக
தெரியுமா?

நடிகை வித்யூலேகா
நடிகை வித்யூலேகா ராமன் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுபோன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார். தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, இனிமே இப்படித்தான், வேதாளம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

காதல் திருமணம்
குண்டாக பப்ளியாக இருந்த வித்யூலேகா, உடம்பை சிறப்பாக குறைத்து ஸ்லிம்மானார். தொடர்ந்து சஞ்சய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் ஸ்விம்மிங் உடையில் படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சைக்கு பதிலடி
இந்த ஸ்விம்மிங் உடைகளை பார்த்து அவர் விவாகரத்து செய்துவிட்டாரா என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, உடைமூலம் ஒருவருக்கு விவாகரத்து ஆகும் என்றால், நன்றாக உடை உடுத்துபவர்கள் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமே. ஆனால் அப்படி நடப்பதில்லையே என்று எதிர்கேள்வி எழுப்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்யூலேகா
இதனிடையே தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி அடுத்த வரம் ஒளிபரப்பாக உள்ளது. இதில் 6 இறுதிப்போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், வித்யூலேகாவும் ஒருவர்.

பாலா சகோதரர் போன்றவர்
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், பல விஷயங்கள் குறித்து அவர் ஷேர் செய்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை தான் மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் பாலா தனது சகோதரர் போன்றவர் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மகிழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே பல சர்ச்சையான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு வேண்டவே வேண்டாம் என்று அவர் பதிலளித்துள்ளார். தான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அதுவே போதும் என்று தெரிவித்துள்ளார்.