விஜய் சேதுபதி பர்த்டே ஸ்பெஷல்..யாதும் ஊரே யாவரும் கேளீர் போஸ்ட்
சென்னை : யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் இரண்டாவது போஸ்டரை விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை இன்று ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.இதனை அடுத்து பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இவர் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படங்களின் போஸ்டரை பிறந்த நாள் பரிசாக வெளியிட்டு வருகின்றனர்.
அதன் வரிசையில் இவர் நடித்து கொண்டு இருக்கும் அடுத்த படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் இதில் இவருடன் மேகா ஆகாஷ் மற்றும் கனிகா நடித்து வருகின்றனர். இப்படத்தை வெங்கட கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடித்து வரும் இந்த படத்தில் சர்வதேச அளவிலான பிரச்சினை குறித்து பேசியதாக தகவல்கள் வருகின்றன.
இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை நேற்று வெளியிட்டு படக்குழு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தது. இன்று இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று பிறந்த நாள் என்பதால் படக்குழு சற்று முன் அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் ஹாப்பி பர்த்டே டு ஹவர் ஹீரோ என்று குறிப்பிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி தூங்கி கொண்டு இருப்பது போல வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











