Exclusive : அர்ப்பணிப்பான நடிப்பு... மனம் திறந்து பாராட்டிய விக்ரம்… நெகிழ்ந்த வினோதினி!

சென்னை : எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தனது முதல் தடத்தை பதித்து, குணசித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் அழகாக நடித்து அனைத்து தரப்பு மக்களின் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Actress Vinodhini Vaidyanathan shares her experience with vikram during ponniyin selvan shoot
பொன்னியின்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தில் கிடைத்த அனுபவங்களையும் பல சுவாரசியமான தகவல்களையும் நேர்காணலில் தம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரின் சுவாரசியமான நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

கேள்வி : சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது.

பதில் : மேடையில் நடித்து கை தட்டலை பெறுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்பா, அம்மாவும் அதற்கு ஊன்று கோலாக இருந்தார்கள். இதனால் பல மேடை நாடகங்களில் நடித்து அங்கிருந்து என் திரைப்பயணத்தை தொடங்கினேன்.

Actress Vinodhini Vaidyanathan shares her experience with vikram during ponniyin selvan shoot

கேள்வி : ஆண்டவன் கட்டளை, அரண்மனை 2 திரைப்படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பீங்க.. இயல்வாகவே நகைச்சுவை உணர்வு அதிகமா?

பதில் : இயல்பாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாவே இருக்கும். நான் எழுதிய நாடகங்கள் எல்லாமே நகைச்சுவையானவைத்தான். அவை அனைத்தையும் நான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரத்திற்கு தகுந்த படி பயன்படுத்துகிறேன்.

Actress Vinodhini Vaidyanathan shares her experience with vikram during ponniyin selvan shoot

கேள்வி : கடல்,ஒகே கண்மணி,பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் ?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது , நடிகர் விக்ரம் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது, வணக்கம் கூறி நான் உங்கள் ரசிகை என்றேன். உடனே விக்ரம் அவர்கள், இதற்கு முன் உங்களை எங்கோ பார்த்து இருக்கேன் என்று கூறினார். இல்ல சார், இதுதான் முதல் முறை என்றேன். ஓ... யெஸ். நீங்க...சூரரைப்போற்று திரைப்படத்தில் ஏர்போர்ட் காட்சியில் வருவீர்களே அதைத்தான் நான் எங்கோ பார்த்தது போல் இருக்கு என்று கூறி, என்னை மிகவும் பாராட்டினார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல சரத்குமார் அவர்களும் என்னை, வெகுவாக பாராட்டினார். இந்த இரண்டு நிகழ்வும் என்னை மிகவும் நெகிழ்வித்தது.

Actress Vinodhini Vaidyanathan shares her experience with vikram during ponniyin selvan shoot

கேள்வி : சவால் மிகுந்த வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பீங்களா?

பதில் : இதற்கு முன்பே யமுனா என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தற்போது ஒரு வெப் சிரீஸ் மற்றும் இரண்டு படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்று பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார் நடிகை வினோதினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X