விஜயகாந்த குடிகாரர்..சீமான் கோமாளினு சொல்லியே க்லோஸ் பண்ணூனீங்க.. இப்ப விஜய்யா? நடிகை ஆதங்கம்!
சென்னை: கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், நடிகை வினோதினி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கரூர் 41 பேர் பலியான வழக்கில் தவெக மதியழகன், பவுன்ராஜ் கைதாகி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும் என விவாதம் செய்யப்பட்டது.

விஜய் வீடியோ: இத்தொடர்ந்து, நேற்று விஜய் வெளியிட்ட வீடியோவில், என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை.கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பேசி இருந்தார்.
நடிகை வினோதினி: இந்த வீடியோவைத்தொடர்ந்து பலர் விஜய் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என கருத்துக்களை கூறிவந்த நிலையில், நடிகை வினோதினி, தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் அவர்கள் பண்ணின அல்லது பண்ணாத எல்லாத்தையும் விமர்சியுங்க பரவாயில்ல... ஆனா விஜய்க்கு அந்த காம்ப்லெக்ஸ் இருக்கு இந்த காம்ப்லெக்ஸ் இருக்குன்னு பெரிய மனோதத்துவ நிபுணர் மாதிரி பேசி பிம்பத்த உருவாக்காதீங்க... திராவிடக்கட்சிகளுக்கு எதிரா வந்த எல்லாரையும் எதாவது சொல்லி க்லோஸ் பண்ணூனீங்க... விஜயகாந்த குடிகாரர், கமல் பாஜக பி டீம், சீமான் கோமாளி... மாற்றுக்கட்சின்னு இங்க யாரும் வரவே முடியாத அளவுக்கு, இல்ல வந்தாலும் திராவிடக்கட்சிகளுக்கு ஆதரவா இல்ல அடி பணிஞ்சுதான் இருக்கணும்னு ஆக்கிடாதீங்க. அவர கொள்கை ரீதியா சட்ட ரீதியா எதிர்க்கறத பத்தி நான் ஒண்ணும் சொல்லல... ஆனா இப்படி பர்ஸனாலிட்டிய டீகோட் பண்றதுலலாம் இறங்காதீங்க. OCD NPD MPDந்னு என்னமோ சைக்காலஜி படிச்சுட்டு வந்தா மாதிரி ஒரோருத்தரும் பேசிட்டு இருக்காங்க. இப்படி அடுத்தவனுக்கு மனநோய் இருக்குன்னே பேசுறதே பெரிய மனநோய் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











