யாருக்கு ஜெயலலிதாவாக நடிக்க தகுதி இருக்கு?- வீடியோ
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், அவரை மே மாதம் நடக்கும் பட பூஜையில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இயக்குநர் ரவிரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றி, அரசியலில் எம்ஜிஆரால் எவ்வாறு கொண்டு வரப்பட்டார்? பிறகு தன்னைச்சுற்றியிருந்த எதிரிகளுக்கு மத்தியில் துணிச்சலாக அரசியல் செய்த விதம் என பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுமாம்.
"தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். ஜெயலலிதாவின் முகச்சாயல் ஒத்துப்போகக்கூடிய ஒரு நடிகையைத்தான் தற்போது தேர்வு செய்து வைத்துள்ளோம். படத்தின் ஷூட்டிங் தொடங்கும்போது அந்த நடிகையை அறிமுகம் செய்வேன். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும்.' என இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார்.
இயக்குநர் ரவிரத்தினம் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து பரபரப்பு கிளப்பியர். அந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.