என்ன இப்படி சுவற்றில் பல்லி மாதிரி ஒட்டிகிட்டு, தலைகீழா தொங்குறார்...மிரட்டும் ஜெரின் கான் வீடியோ

மும்பை : ஹாலிவுட் நடிகையான ஜெரின் கான், பெரும்பாலும் பாலிவுட் படங்களிலேயே நடித்துள்ளார். இது தவிர பஞ்சாபி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர்.

2021 ம் ஆண்டிற்கு பிறகு சரியாக படங்களில் நடிக்காமல் இருந்த ஜெரின் கான், பிக்பாஸ் பிரபலம் ஷிவாஷிஷ் மிஸ்ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இது பற்றி பேட்டி ஒன்றில் ஜெரின் கானிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட போது, டேட்டிங்கோ இல்லையோ. நாங்கள் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது என்றார்.

இருவரும் இணைந்து இருக்கும் போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ஜெரின் கான். ஷிவாஷிஷ் மிஸ்ராவின் குழந்தை தனம் தான் தனக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜெரின், ஷிவாஷிஷ் மிஸ்ராவை பயங்கரமாக புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் இவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் பாலிவுட்டில் அதிகரித்து வருகின்றன.

 Actress Zareen khans latest work out video suprised her fans

ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் பிரபலமான நடிகையாகும் எண்ணத்துடன் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நாக பைரவா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும் ஹீரோயினாக, இரட்டை வேடத்தில். தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகளின் வரத்தும், பாலிவுட் நடிகைகளின் வரத்தும் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

இந்த சமயத்தில் ஜெரின் கான் இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் சுவரில் ஒரு கயிறு கட்டி இருக்க, அதை பிடித்துக் கொண்டு,சுவரில் பல்லி போல ஒட்டிக் கொண்டு, தலைகீழாக தொங்குகிறார் ஜெரின் கான். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.

பார்த்துங்க பாதுகாப்பு, ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். நீங்க பண்ணுற ஒர்க் அவுட்டை பார்த்தா எங்களுக்கு பகீருன்னு இருக்கு. இப்படி ரிஸ்க் எடுத்து ஒர்க்அவுட் பண்ணுற நடிகையை நாங்க இதுவரை பார்க்கல. சீக்கிரம் கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்குங்க என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெரின் கான் இது போல் வீடியோ வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அடிக்கடி யோகா, பாக்சிங் செய்யும் வீடியோக்களை வெளியிடுவதுண்டு. பல வீடியோக்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் உடனடியாக வைரலாகி விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X