ப்பா.. யானையையே குளிப்பாட்டுறாரே.. என்னவொரு தில்.. டிரெண்டாகும் பிரபுதேவா பட ஹீரோயின் வீடியோ!

மும்பை: சிம்புவின் இது நம்ம ஆளு மற்றும் பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த மும்பை நடிகை அதா ஷர்மா யானைகளை குளத்தில் இறங்கி குளிப்பாட்டும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான விஷயங்களை செய்து தொடர்ந்து டிரெண்டாகி வரும் நடிகைகளில் முக்கியமானவர் அதா கான்.

சில நாட்களுக்கு முன்னதாக இலை தழை ஆடையை அணிந்து கொண்டு பசுமை தொடர்பான விழிப்புணர்வை இவர் ஏற்படுத்தி இருந்தார்.

பிரபுதேவா பட நடிகை

பிரபுதேவா பட நடிகை

2008ம் ஆண்டு வெளியான 1920 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அதா ஷர்மா. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆட்டம் போட்டு சென்றார். பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து கலக்கியவர் அதா ஷர்மா.

ஸ்லிம் ஃபிட் மாடல்

ஸ்லிம் ஃபிட் மாடல்

இன்ஸ்டாகிராம் பியூட்டியான அதா ஷர்மா சைஸ் ஜீரோ இடையழகை மெயின்டெயின் செய்து வருகிறார். ஒல்லி பெல்லி இடுப்பழகை காட்டி ரசிகர்களை உருக வைத்து 8 மில்லியன் ஃபாலோயர்களுக்கு மேல் கொண்டுள்ளார் இந்த பாலிவுட்டின் இளம் நடிகை. இன்ஸ்டாகிராமில் மிருகங்களுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருக்கும் ஏகப்பட்ட வீடியோக்களையும் இவர் பதிவிட்டுள்ளார்.

யானைகளை குளிப்பாட்டி

யானைகளை குளிப்பாட்டி

வனவிலங்கு ஆர்வலராக மாறி உள்ள நடிகை அதா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிரை, மாடு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்துள்ளார். கொஞ்சம் கூட பயமே இல்லாமல் இரண்டு யானைகளை குளத்தில் இறங்கி குளிப்பாட்டும் இவரது லேட்டஸ்ட் வீடியோ சோஷியல் மீடியாவில் தற்போது தீயாக ஷேர் ஆகி வருகிறது.

யானைகளின் பெயர்கள்

யானைகளின் பெயர்கள்

ஃபிராங்கி மற்றும் தங் தாய் என பெயரிடப்பட்டுள்ள அந்த இரு யானைகளையும் குளிப்பாட்டி அவர்களுடன் குளத்தில் விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் பாலிவுட் நடிகை அதா ஷர்மா. கடந்த ஆண்டு இவர் நடித்த மீட் க்யூட் ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

துணிச்சல் அதிகம்

துணிச்சல் அதிகம்

அதா ஷர்மாவின் இந்த க்யூட்டான யானையை குளிப்பாட்டும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு துணிச்சல் அதிகம் அதா என பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர். ஃபிட்னஸ் ஃப்ரீக்கான அதா ஷர்மா சேலையை கட்டிக் கொண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவுக்கு சில பாலிவுட் பிரபலங்களும் லைக் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X