»   »  ஜிலீர் டான்ஸ்.. சிங்கிள் குத்து... "அடா"வை களமிறக்கினார் சிம்பு!

ஜிலீர் டான்ஸ்.. சிங்கிள் குத்து... "அடா"வை களமிறக்கினார் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலுக்காக, சிம்புவுடன் இணைந்திருக்கிறார் பிரபல நடிகை அடா ஷர்மா.

பாலக்காட்டில் பிறந்த அடா ஷர்மா ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துப் புகழ்பெற்றவர்.


தமிழ்ப்படங்களில் இதுவரை தலை காட்டாதிருந்த அடா ஷர்மா, தன்னுடைய அறிமுகத்தை தற்போது சிம்புவின் 'இது நம்ம ஆளு' படம் மூலம் தொடங்கியுள்ளார்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் படத்தில் இன்னும் 2 பாடல்கள் பாக்கி உள்ளன. இந்தப் பாடலில் நடிக்க நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் மறுத்து விட்டனர். இதனால் மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை அடா ஷர்மாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறது.


சிம்புவை

சிம்புவை

ஏற்கனவே நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்திருக்கும் இப்படத்தில் 3 வது நடிகையாக அடா ஷர்மா இணைந்திருக்கிறார். ஒரு பாடல் மட்டுமின்றி இவருக்கு சில காட்சிகளையும் இப்படத்தில் வைத்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளில் சிம்புவை விரும்பும் பெண்ணாக இவர் நடிக்கவிருக்கிறார்.


மாமன் வெயிட்டிங்

மாமன் வெயிட்டிங்

அடா ஷர்மா இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் 'மாமன் வெயிட்டிங்' என்ற குத்துப் பாடலுக்கு சிம்புவுடன் இணைந்து அவர் ஆடுகிறார்.


டிஆர் -சுசித்ரா

டிஆர் -சுசித்ரா

இந்தப் பாடலை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருடன் இணைந்து சுசித்ரா பாடுகிறார். இதில் டி.ராஜேந்தர் வெறுமனே பாட மட்டும் செய்கிறாரா? இல்லை வல்லவன் 'அம்மாடி ஆத்தாடி' போல ஒரு டான்ஸையும் போடுவாரா? என்பது தெரியவில்லை.


வல்லவன்

வல்லவன்

வல்லவன் படத்திற்குப் பின் 10 வருடங்கள் கழித்து சிம்பு- நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படமென்பதால், தள்ளித்தள்ளி போனாலும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைவதாக இல்லை. முதலில் மார்ச் 25 ம் தேதி இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி பாடல்களை முடித்து அந்தத் தேதியில் வெளியிடுவது சாத்தியமில்லை என்பதால், படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.


English summary
Mollywood Actress Adah Sharma Make Tamil Debut with Simbu's Idhu Namma Aalu. She to do a Special Number in this Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil