»   »  மழை, வெள்ளத்தில் பாய்ந்து கரையேறியது அதர்வா முரளியின் 'ஈட்டி'

மழை, வெள்ளத்தில் பாய்ந்து கரையேறியது அதர்வா முரளியின் 'ஈட்டி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா முரளி - ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஈட்டி திரைப்படம் சென்னையில் சுமார் 69.97 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.

இதுவரை வெளியான அதர்வாவின் படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்காத நிலையில் ஈட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.


ஈட்டி, வேதாளம், தூங்காவனம், இஞ்சி இடுப்பழகி, உறுமீன் மற்றும் உப்புக் கருவாடு ஆகிய படங்களின் வசூல் நிலவரங்களை இங்கே காணலாம்.


ஈட்டி

ஈட்டி

தமிழகம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ம் தேதிகளை அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ஈட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை 69.97 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. மேலும் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு அதர்வாவின் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் மக்கள் கொடுத்த நேர்மறையான விமர்சனங்களே இவ்வளவு பெரிய வசூலுக்கு காரணமாகி இருக்கிறது.


இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

ஆர்யா - அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி வெளியான நேரத்தில் மிகச்சரியாக மழை, வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டனர். இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸில் படுத்து விட்டது. தற்போது மழை முடிந்து மக்கள் இயல்புக்குத் திரும்பி வரும் இந்த நேரத்தில் நிறைய புதிய படங்கள் வெளியாவதால் இஞ்சி இடுப்பழகி எடுபட மறுக்கிறது. கடந்த வாரம் 16.13 லட்சங்களை வசூலித்த இப்படம் சென்னையில் இதுவரை 1.02
கோடிகளை வசூல் செய்திருக்கிறது.


வேதாளம்

வேதாளம்

அஜீத்,லட்சுமி மேனன், சுருதிஹாசன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேதாளம் சென்னையில் கடந்த வாரம் 7.89 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. படம் வெளியாகி 5 வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை 6.56 கோடிகளை ( சென்னையில் மட்டும்) வசூலித்து இருக்கிறது அஜித்தின் வேதாளம்.


தூங்காவனம்

தூங்காவனம்

கமல்ஹாசன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான தூங்காவனம் கமலுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. சென்னையில் இதுவரை 2.68 கோடிகளை வசூல் செய்துள்ளது தூங்காவனம்.


உறுமீன்

உறுமீன்

பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடிப்பில் வெளியான உறுமீன் கடந்த வாரத்தில் 14.32 லட்சங்களை வசூல் செய்திருக்கிறது. சென்னையில் இதுவரை 39 லட்சங்களை இப்படம் வசூல் செய்துள்ளது.


உப்புக் கருவாடு

உப்புக் கருவாடு

உப்புக் கருவாடு நன்றாக இருந்த போதிலும் மழை, வெள்ளத்தால் பாக்ஸ் ஆபிசில் படம் எடுபடவில்லை. சென்னையில் இதுவரை 15.67 லட்சங்களை வசூல் செய்துள்ளது உப்புக்கருவாடு.


இந்த 2௦15 வருடம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய நஷ்டத்தைப் பரிசளித்து இருக்கிறது என்பதே ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரின் ஆதங்கமாக உள்ளது.English summary
Adharvaa Murali’s Eetti First weekend Box Office Collection. This Movie Has Earned 69.97 lakhs in Last 3 Days.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil