அரங்கம் அதிர வரும் அதீரா...கோப்ரா செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?
சென்னை : நடிகர் விக்ரமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக முக்கிய அப்டேட் ஒன்றை கோப்ரா படக்குழுவினர், ஸ்பெஷல் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இதற்காக ஆவலோடு காத்திருப்பதாக ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்சன் , ஆக்ஷன், த்ரில்லர் படம், கோப்ரா. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் லலித் குமார் தயாரித்துள்ளார். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, ரோஷன் மேத்திவ், மிருனாளினி ரவி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகும் படம் இது.

விக்ரமிற்கு இத்தனை கெட்அப்பா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படம் மே 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மதியழகன் என்ற ரோலில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு , மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் அதிகபட்சமாக விக்ரம் 25 கெட்அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இர்ஃபான் பதான், இன்டர்போல் ஆபீசர் ரோலில் நடித்துள்ளாராம்.

கோப்ரா போஸ்டர் இதுக்கு தானா
கோப்ரா படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நேற்று வெளியிட்டது. இன்று நடிகர் சியான் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கலர்ஃபுல்லான மரண மாஸ் போஸ்டர் வெளியிடப்பட்டது. சிவப்பு நிற பேக்கிரவுண்டில் சுற்றி ஏராளமான பெண்கள் நடனமாட , கருப்பில் சிவப்பு நிற பூ போட்ட கோட், முகத்தில் ஒரு பக்கத்தில் மறைத்தபடி மாஸ்க் அணிந்து விக்ரம் நடந்து வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

கோப்ரா லேட்டஸ்ட் அப்டேட்
நேற்று ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று ஸ்பெஷல் வீடியோவுடன் கோப்ரா படத்தின் செகண்ட் சிங்கிள் ஏப்ரல் 22 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதீரா என துவங்கும் பாடல் செகண்ட் சிங்கிளாக வெளியிட உள்ளதாம். இந்த தகவலை படக்குழுவை சேர்ந்த அனைவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

திரை அதிர போகுது
கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தும்பி துள்ளல் பாடல் 2020 ம் ஆண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்டது. ஸ்ரேயா கோசல் குரலில் அமைந்த இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. கோப்ரா படத்திற்கு தாமரை, பா.விஜய், விவேக், விக்னேஷ் சிவன் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் வாங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











