»   »  வெத்தலை போட்டமாதிரி பேசும் கார்த்திக்கையே பாடகராக்கியவர் ஆதித்யன்

வெத்தலை போட்டமாதிரி பேசும் கார்த்திக்கையே பாடகராக்கியவர் ஆதித்யன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல்- வீடியோ

சென்னை: நடிகர் கார்த்திக்கை பாடகராக்கிய பெருமைக்குரியவர் இசையமைப்பாளர் ஆதித்யன்.

ஹைதராபாத்தில் வசித்து வந்த இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 54. அவரின் மறைவு செய்தி அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திக்

கார்த்திக்

அமரன் படத்திற்கு இசையமைத்தவர் ஆதித்யன். அந்த படத்தின் மூலம் நடிகர் கார்த்திக்கை பாடகராக்கியவர். வெத்தலை போட்ட சோக்குல நான் என்று கார்த்திக் பாடிய அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

சீவலப்பேரி பாண்டி

சீவலப்பேரி பாண்டி

நெப்போலியன், சரண்யா நடித்த சீவலப்பேரி பாண்டி படத்திற்கும் இசையமைத்தவர் ஆதித்யன். அந்த படத்தில் வந்த கிழக்கு செவக்கையிலே மற்றும் ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

மீனா

மீனா

சத்யராஜ், மீனா, மணிவண்ணன், ஜெயசித்ரா உள்ளிட்டோர் நடித்த மாமன் மகள் படத்தில் குயிலே குயிலே, சுப்கே சுப்கே சோரி சோரி ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஆதித்யன்.

மைலாப்பூர் மாமி

மைலாப்பூர் மாமி

கார்த்திக், சங்கவி நடித்த லக்கி மேன் படத்தில் பலான பார்ட்டி, பிரபு, ரோஜா நடித்த சூப்பர் குடும்பம் படத்தில் மைலாப்பூர் மாமி உள்ளிட்ட பல நினைவில் நிற்கும் பாடல்களை கொடுத்துள்ளார் ஆதித்யன்.

English summary
Music director Adhithyan passed away in Hyderabad. He was the one who made actor Karthik to sing Vethala Pota Sokkula song for the movie Amaran directed by Rajeshwar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil