நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்
சென்னை: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபி சரவணனும், பட்டதாரி படத்தில் நடித்த அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அபி சரவணனை சிலர் காரில் கடத்திவிட்டதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியுள்ளார் வீடு திரும்பியுள்ள அபி சரவணன்.

போலீஸ்
அபி சரவணனை அதிதி மேனன் ஆள் வைத்து கடத்தியதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் அதிதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவை அளித்துவிட்டு அதிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடத்தல்
அபி சரவணன் என்கிற சரவணகுமார் என் கணவர் இல்லை. அவரை நான் கடத்தவில்லை. ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை பிரிந்துவிட்டேன் என்றார் அதிதி.

புகார்
அபி சரவணன் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டது போன்று போலி ஆவணங்களை தயார் செய்திருக்கிறார். நான் அவரின் மனைவி என்று சமூக வலைதளங்களிலும் பொய்யாக தெரிவித்துள்ளார் என்று அதிதி தெரிவித்தார்.

அதிதி
ட்விட்டர் உள்ளிட்ட என் சமூக வலைதள கணக்குகள் கடந்த மாதம் ஹேக் செய்யப்பட்டன. என் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்தே அபி சரவணன் மீது போலீசில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன். எங்களுக்கு திருமணம் நடந்தது போன்று போலி ஆவணத்தை தயாரித்ததற்காகவும், என் சகோதரியை தாக்கியதற்காகவும் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என்று அதிதி கூறினார்.


Click it and Unblock the Notifications











