»   »  ஸ்மூலில் செமையாக அசத்தும் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன்!

ஸ்மூலில் செமையாக அசத்தும் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஸ்மூல் என்பது கரோக்கி இசையைப் பயன்படுத்தி ஒருவருடனோ, பலருடனோ இணைந்து பாடல்களைப் பாட முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆப்.

ஸ்மூல் நிறுவனம் தொடங்கி பல வருடங்கள் கடந்திருந்தாலும் இந்த ஆப் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே உலகம் முழுவதும் செமையாக ஹிட் அடித்திருக்கிறது.

இசையை இதுவரை ரசித்து மட்டுமே வந்த இசைப் பிரியர்கள் ஸ்மூல் ஆயுதத்தைக் கையில் எடுத்து கண்டபடி பாடத் தொடங்கிவிட்டார்கள்.

சமூக இசை ஊடகம்

சமூக இசை ஊடகம்

ஸ்மூல் ஆப்பில் சிறப்பாக பாடிப் பலர் பிரபலமாகியிருக்கிறார்கள். அதே நேரத்தில் மொக்கையாகப் பாடி பல்பு வாங்கிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இசையால் இணைவோம்

இசையால் இணைவோம்

இசையைக் கேட்டு ரசிப்பது மட்டும் ரசிகர்களின் வேலை அல்ல... அவர்களே இசையை உருவாக்கலாம்... பலருடன் இணைந்து பாடலாம்... ஷேர் பண்ணலாம் என எக்கச்சக்க ஆப்ஷன்ஸ் கொடுத்து செமையாக ரீச் ஆகியிருக்கிறது இந்த ஆப்.

ஆதவன் ஓகே... ஆனா

விஜயகாந்த் நடித்த 'திருமூர்த்தி' படத்திலிருந்து 'செங்குருவி செங்குருவி...' பாடலை சிறப்பாகப் பாடியிருக்கிறார் ஆதித்யா டி.வியில் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான வி.ஜே. ஆதவன்.

இளையராஜா பாடல்

'அவதாரம்' படத்தில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்று சூப்பர்ஹிட் பாடலான 'தென்றல் வந்து தீண்டும்போது...' பாடலை பல்லவி என்பவரோடு இணைந்து சிறப்பாகப் பாடியிருக்கிறார் ஆதவன். காப்பிரைட் பிரச்னையால் இளையராஜா பாடல்கள் ஸ்மூல் ஆப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மெலடி செம்ம

'காதல் ரோஜாவே' மெலடி பாடலை பல்லவியோடு இணைந்து சிறப்பாகப் பாடியிருக்கிறார் ஆதித்யா டி.வி புகழ் ஆதவன்.

டூயட்டும் சூப்பர்

'முதல்வன்' படத்தில் இடம்பெற்ற 'குறுக்கு சிறுத்தவளே...' பாடலுக்கு ஆதவனும் பல்லவியும் இணைந்து அழகாகப் பாடியிருக்கிறார்கள்.

தளபதி பாடல்

'தளபதி' படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி...' பாடலை ஆதித்யா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆதவனும், பல்லவி என்பவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

மிமிக்ரி கலைஞர்

'ஓ.. பட்டர்ஃப்ளை... பட்டர்ஃப்ளை' பாடலை ஆதவனும், பல்லவியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். மிமிக்ரி கலைஞரான ஆதவன் பாடகராகவும் அசத்தி வருகிறார்.

English summary
In recent days, Music lover's latest tool is smule app. Adithya TV fame and mimicry artist Aadhavan is singing nicely in smule app as a singer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil