சிக்கலில் ஆதிபுருஷ் மூவி..தத்தளிக்கும் பிரபாஸ்.,ராமாயண் தொடர் சீதை ரோல் நாயகி தீபிகாவும் விமர்சனம்
டெல்லி: ஆதிபுருஷ் தொடரும் சர்ச்சை.ராமாயணத்தில் VFX ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ராமாயண் தொடர் நாயகி தீபிகா எதிர்ப்பு. பிரபாஸின் ஆதி புருஷ் படம் டீசர் வெளியானதிலிருந்து பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பொன்னியின் செல்வன் விவகாரத்தில் பிரபாஸை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ்-தெலுங்கு மோதலில் இடையில் சிக்கிய பிரபாஸ்
பொன்னியின் செல்வன் வெளியானவுடன் அதன் மீதான விமர்சனம் தெலுங்கு படம், தமிழ் படம் என மாறி பிரபாசின் பாகுபலியா? பொன்னியின் செல்வனா என இருபுறமும் நின்று நெட்டிசன்கள் மோதிக்கொள்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பாக ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானவுடன் அதை வைத்தும் ட்ரோல் செய்து, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசருக்கு எதிர்ப்பும், விமர்சனமும் கலந்து வருகிறது.

தமிழ்-தெலுங்கு மோதலில் இடையில் சிக்கிய பிரபாஸ்
பொன்னியின் செல்வன் வெளியானவுடன் அதன் மீதான விமர்சனம் தெலுங்கு படம், தமிழ் படம் என மாறி பிரபாசின் பாகுபலியா? பொன்னியின் செல்வனா என இருபுறமும் நின்று நெட்டிசன்கள் மோதிக்கொள்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பாக ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானவுடன் அதை வைத்தும் ட்ரோல் செய்து, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசருக்கு எதிர்ப்பும், விமர்சனமும் கலந்து வருகிறது.

ராமாயன் தொடரின் புகழ்பெற்ற சீதை நாயகி தீபிகா சிக்லியா எதிர்ப்பு
பாலிவுட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. டீசரின் மோசமான வி.எஃப்.எக்ஸ். காட்சிகளால் படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், 1980 காலகட்டங்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றத் தொடரான ராமாயணம் தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியா ஆதிபுருஷ் படத்தை பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மோசமான வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பம்
அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "ஆதிபுருஷின் டீசரை நான் பார்த்தேன். ராமாயணம் ஒரு உண்மை கதை. ராமாயணத்தை நான் வி.எஃப்.எக்ஸ். உடன் இணைக்க விரும்பவில்லை. ஹனுமான் எப்படி தோல் ஆடை (லெதர்) கவசம் அணிந்துள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நான் அதை கவனிக்கவில்லை. ஆனால், அது உண்மையாக இருந்தால் நாம் கண்டிப்பாக வால்மீகி மற்றும் துளதிதாஸ் எழுதிய ராமாயணத்தை பின்பற்ற வேண்டும். ஏனென்றால், ராமாயணம் நமது நாட்டின் சொத்து" என்று கூறியுள்ளார்.

அனுமன் பாத்திரம் அணிந்த தோல் ஆடைக்கவசத்துக்கும் எதிர்ப்பு
ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், படத்தில் ஹனுமான் கதாபாத்திரம் தனது தோலால் கவசத்தை அணிந்திருப்பதற்கு மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோடம் மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் ராமாயணம் டிவி தொடரின் கதாநாயகி தீபிகாவின் கருத்தும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டீசருக்கே இப்படி எதிர்ப்பா என படக்குழு கலக்கத்தில் உள்ளது.

டீசருக்கே இத்தனை எதிர்ப்பா? கலங்கும் பிரபாஸ்
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாசுடன் பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார், கிரிதி சோனன், தேவ்தத்தா நகே, சன்னி சிங் ஆகியோர் நடித்துள்ளனர். பாகுபலிக்கு பிறகு வெளியான சாஹூ, ராதே ஷ்யாம் திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் ஆதிபுருஷ் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த பிரபாசிற்கு ஆதிபுருஷ் டீசரே கடும் விமர்சனங்களை அளித்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











