»   »  'அருவி' ஹீரோயின் எப்படி கதை கேட்கிறாராம் தெரியுமா?

'அருவி' ஹீரோயின் எப்படி கதை கேட்கிறாராம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அதிதி பாலன்- வீடியோ

சென்னை : கடந்த வருடத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'அருவி' படத்தின் கதாநாயகி அதிதி பாலன், தனது குடும்பத்தாருடன் அமர்ந்து அடுத்த படத்திற்கான கதையை கேட்டுத் தேர்வு செய்து வருகிறாராம்.

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அதிதி பாலன். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அதிதி பாலன் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடித்துக்கொடுத்த 'அருவி' படத்தைத் தவிர வேறு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

Aditi balan hears story with her family

அவரது இரண்டாவது படத்துக்கான தாமதம் குறித்து அவர் கூறியதாவது: "இரண்டாவது படத்தில் நான் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சில கதைகள் கேட்டேன். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. கதை தான் முக்கியம். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து கதைகளை கேட்டு வருகிறேன்.

எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக கதைகள் பிடிக்க வேண்டும். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன். அநேகமாக இன்னும் ஒரு மாதத்தில் என் இரண்டாவது படத்தை அறிவிப்பேன்" எனக் கூறியிருக்கிறார் அதிதி பாலன்.

English summary
Aditi Balan is the heroine of 'Aruvi' which has been well received by the fans last year. In this situation, Aditi sitting with his family and listening to the story for the next film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X