தமிழ் சினிமாவில் இடைவெளி கொடுத்தது ஏன்.. பிரபல நடிகை பளீச்!

சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளி கொடுத்தது ஏன் என பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அருவி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தரமான நடிகை என்ற பெயரை பெற்றார்.

அருவி படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் பெற்றார் அதிதி பாலன். ஆனால் அதன் பிறகு அதிதி பாலனை பெரிதாக தமிழ் சினிமாவில் காண முடியவில்லை.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். நளன் குமாரசாமி இயக்கிய ஆடல் பாடல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி பாலன்.

ஏன் நடிக்கவில்லை?

ஏன் நடிக்கவில்லை?

இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான 'கோல்டு கேஸ்' மலையாள படத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை அதிதி பாலன்.

அதற்கான இடைவெளி

அதற்கான இடைவெளி

அதாவது அருவி படத்திற்கு பிறகு தான் நடிக்காமல் எடுத்துக் கொண்ட இடைவெளி சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக தான் தேர்ந்தெடுத்த வழி என குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்திக்கொண்டேன்

பயன்படுத்திக்கொண்டேன்

இந்த இடைவெளியில் திரைத்துறையைப் நன்றாக புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அதிதி பாலன். சினிமாவில் தான் செய்ய விரும்புவதை கண்டுபிடிக்கவும் சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X