»   »  "இப்பதான் நேரம் கிடைச்சுச்சாமா.." 10 வருடங்களுக்கு பிறகு தாய்மொழியில் நடிக்கும் அதிதி ராவ்!

"இப்பதான் நேரம் கிடைச்சுச்சாமா.." 10 வருடங்களுக்கு பிறகு தாய்மொழியில் நடிக்கும் அதிதி ராவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தப் படம் தோல்வியைத் தழுவியதால் தமிழில் வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2007-ல் 'சிருங்காரம்' என்ற தமிழ்ப்படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமான தொடர்ச்சியாக பல வருடங்கள் பாலிவுட்டில் மட்டுமே வலம் வந்தார். இந்தியில் பிசியாகி விட்ட அவர், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

Aditi rao acts first time in her mother tongue

ஆனால், அந்தப் படமும் அதிதிக்கு வெற்றியைத் தரவில்லை. தொடர்ந்து பூமி, பத்மாவதி படங்களில் நடித்துள்ளார். இதில் 'பூமி' படம் தோல்வியை தழுவியது. பத்மாவதி விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்தநிலையில், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும், 'ஆடா நாடே வேதா நாடே' என்ற படத்தில் நடிக்கிறார் அதிதி. இப்படத்தை தேஜா என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2018 புத்தாண்டு முதல் தொடங்குகிறது.

சினிமாவில் நடிக்க வந்து பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போதுதான் தனது தாய்மொழியான தெலுங்கில் முதல் முறையாக நடிக்கப்போகிறார் அதிதி ராவ். இத்தனை வருடங்கள் காத்திருந்து தாய் மொழியில் நடிக்கவரும் அதிதிக்கு அக்கட தேசத்தினர் ஆதரவு தருவார்களா?

English summary
Aditya Rao Hydari is a well-known actress fter the movie 'Kaatru veliyidai'. In 2007, aditi rao made her dubut in the film 'Sringaram' through the Tamil film industry. After ten years of acting in cinema, Aditi Rao is going to act for the first time in her mother tongue Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X