»   »  கொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை

கொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்.. குஷியில் அதிதி

சென்னை: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்க உள்ளாராம்.

விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய பட்டாளத்தையே வைத்து படம் எடுக்கிறார் மணிரத்னம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு அதிதி ராவ் ஹைதரிக்கு கிடைத்துள்ளது. காற்று வெளியிடையில் கார்த்தி ஜோடியாக நடித்த அதிதி தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

முக்கியம்

முக்கியம்

மணிரத்னம் படத்தில் அதிதி ராவ் ஹைதரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த மாத இறுதியில் அவர் படக்குழுவை சந்தித்து பேசுகிறாராம். மார்ச் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

பேட்டி

பேட்டி

அதிதியை வைத்து மீண்டும் படம் எடுக்க விரும்புகிறேன் என்று மணிரத்னம் தெரிவித்திருந்தார். மணி சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலுடன் உள்ளேன் என்று அதிதி பேட்டி அளித்திருந்தார்.

ஆசை

ஆசை

மணிரத்னம் தான் பேட்டியின் போது கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். இதன் மூலம் மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதிதியின் ஆசை நிறைவேறியுள்ளது.

English summary
Aditi Rao Hydari has been included in Maniratnam's upcoming movie that already has Vijay Sethupathi, Simbu, Arvind Swamy, Jyothika, Aishwarya Rajesh. This is Aditi's second film with Maniratnam after Kaatru Veliyidai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil