நெப்போடிசம் சர்ச்சை.. ஓப்பனா பதில் சொன்ன அதிதி ஷங்கர்.. இப்படி பேசினா பொழச்சிப்பம்மா!

சென்னை: விருமன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை அதிதி ஷங்கர்.

தனது முதல் படத்துக்கே இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளதே என தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகையாக படம் பார்த்த அதிதி ஷங்கர் பூரித்துப் போயுள்ளார்.

நெப்போடிசம் சர்ச்சை குறித்து அவர் வெளிப்படையாக பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

நெப்போடிசம்

நெப்போடிசம்

சினிமா, அரசியல் என உலகம் முழுவதுமே இந்த நெப்போடிசம் சர்ச்சை எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இயக்குநர்களின் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள் என பலரும் சினிமாவில் சாதனையாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். அவுட்ஸைடர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவே பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஷங்கரின் மகள் என்பதற்காக அறிமுகமே கார்த்தியின் விருமன் படத்தில் கிடைத்து விட்டது என வாரிசு சர்ச்சையில் புதிதாக சிக்கி உள்ளார் அதிதி ஷங்கர்.

அதிதி பதில்

அதிதி பதில்

விருமன் புரமோஷனுக்காக ஏகப்பட்ட மீடியாக்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்துள்ளார் அதிதி ஷங்கர். அப்போது, அவரிடம் மறக்காமல் இந்த கேள்வி பிராதனமாக முன் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அதிதி ஷங்கர் சொன்ன பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அப்பா மூலமே விருமன்

அப்பா மூலமே விருமன்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பேஷன். ஆனால், சின்ன வயசுல சொல்லி இருந்தா வீட்டில் அடி விழுந்திருக்கும். படிச்சி முடிச்சிட்டு நம்ம லட்சியத்தை சொன்னா அக்ஸெப்ட் பண்ணுவாரு அப்பான்னு நினைச்சேன். அவர் ஆசையை நான் நிறைவேத்தினேன். என் ஆசைக்கு அவர் செவி சாய்ச்சார். விருமன் படம் முதல் படம் அப்பா மூலமா கிடைக்கலாம். ஆனால், நான் நல்லா நடிக்கலைன்னா அடுத்த படம் எனக்கு கிடைக்காது என ஓப்பனாக சொன்னார்.

ரசிகர்கள் ரொம்ப ஷார்ப்

ரசிகர்கள் ரொம்ப ஷார்ப்

வாரிசு நடிகர்களாக இருந்தாலும், அவர்களிடம் சரியான சரக்கு இல்லைன்னா, ரசிகர்களை தூக்கி வீசிடுவாங்க, முதல் படத்திற்கு அப்பா உதவ முடியும். ஆனால், தொடர்ந்து இண்டஸ்ட்ரியில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்குவது என் கையில் மட்டும் தான் இருக்கிறது என நம்புகிறேன்.

ஆதரவு கிடைக்கும்

ஆதரவு கிடைக்கும்

விருமன் படத்தில் வில்லேஜ் கேர்ள் ரோல் என்பதால் முதல் படத்திலேயே நடிக்க நிறைய சான்ஸ் கிடைக்கும் என நினைச்சேன். அதே போல கிடைத்தது. நிச்சயம் தேன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு எனக்கு நிறையவே வேண்டும் என பப்ளிக்காக கோரிக்கையும் வைத்து விட்டார்.

சூர்யாவுக்கு ஜோடி

சூர்யாவுக்கு ஜோடி

கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அதே போல உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்தால் என்ன சொல்வீங்க என்கிற கேள்விக்கு, ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்திய அதிதி ஷங்கர், கண்டிப்பா கிடைக்கணும், கொடுங்க, நல்லா பண்ணுவேன்னு நம்புறேன் என அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் படத்திற்கும் கொக்கி போட்டுள்ளார் அதிதி ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X