வாரிசு என்ற அங்கீகாரம் இருந்தால் போதுமா?..சரியான பதிலடி கொடுத்த அதிதி ஷங்கர்!

சென்னை : ஷங்கர் மகள் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அதிதி ஷங்கர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அப்படி அவர் நடித்த முதல் படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க உள்ளார்.

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர் நடித்த முதல் படம் வெளியாவதற்கு முன்பே அதிதிக்கு பெரிய நடிகர் சிவகார்த்தியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், கோலிவுட்டில் பலர் அவர் ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்பு வருவதாக பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல, ஆத்மிகா கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

பாடல் சர்ச்சை

பாடல் சர்ச்சை

அது மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை முதலில் ராஜலட்சுமி குரலில் பதிவு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் அதிதியின் குரலில் வெளியானது. இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால் இந்த பாடல் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்தன.

சரியான பதிலடி

சரியான பதிலடி

அதிதி ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்பு வருவதாக எழுந்து வரும் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அதிதி ஷங்கர், சினிமாவில் வெற்றி பெற வாரிசு என்ற அங்கீகாரம் மட்டும் இருந்தால் போதாது, திறமை வேண்டும் திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

டல்லடிக்கும் வசூல்

டல்லடிக்கும் வசூல்

விருமன் திரைப்படம் வெளியாகி ஏழாவது நாள் முடிவில் கிட்டத்தட்ட 40 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணம் விருமன் படம் வெளியான போது மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.விருமன் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடியது. ஆனால் தற்போது இப்படத்திற்கு போட்டியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளதால், தற்போது வசூல் டல்லடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X