»   »  இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்

இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என இயக்குனர் ஆதித்யா சோப்ரா தனது மனைவி ராணி முகர்ஜியிடம் அடிக்கடி கூறுவாராம்.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி இயக்குனர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆதிரா என்ற மகள் உள்ளார். ஆதிராவை யார் கண்ணிலும் காட்டாமல் வளர்க்க விரும்புகிறார் ஆதித்யா.

இந்நிலையில் இது குறித்து ராணி முகர்ஜி கூறுகையில்,

ஆதிரா

ஆதிரா

ஆதிராவின் புகைப்படங்கள் வெளியாவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அவளின் தந்தைக்கு அதில் இஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன். நான் ஆதியின் உணர்வுகளை மதிக்கிறேன்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

என் ரசிகர்கள் ஆதிராவை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதிராவின் புகைப்படத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு பிரபலம் என்பதால் நிச்சயம் ஆதிராவின் புகைப்படங்கள் வெளியாகும்.

ஆதி

ஆதி

ஆதிரா கைக்குழந்தையாக இருப்பதால் அவளின் புகைப்படத்தை தற்போது வெளியிட வேண்டாம் என நினைக்கிறார் ஆதித்யா. ஆனால் அவரால் தொடர்ந்து ஆதிராவை யாரும் புகைப்படம் எடுக்காமல் பாதுகாக்க முடியாது.

புகைப்படம்

புகைப்படம்

ஆதிரா அவள் தந்தையுடன் வெளியே சென்றபோது யாரோ எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. நல்ல வேளை ஆதிராவை என்னுடன் வைத்து யாராவது புகைப்படம் எடுத்திருந்தால் அவ்வளவு தான். ஆதித்யா பயங்கரமாக கோபப்பட்டிருப்பார்.

சாபம்

சாபம்

உன்னை கல்யாணம் செய்ய வைத்து கடவுள் என்னை சபித்துவிட்டார் என்று ஆதித்யா அடிக்கடி என்னிடம் கூறுவார். ஏனென்றால் அவருக்கு மீடியா கண்ணில் படாமல் வாழ ஆசை என்றார் ராணி முகர்ஜி.

English summary
Bollywood actress Rani Mukherji said her husband Aditya Chopra keeps saying that God has cursed him by getting her married to him as he wants to stay away from media glare.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil