Don't Miss!
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- News
ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Bigg Boss Tamil 6 Eviction: கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் செல்லாமல் வெளியேற போறது இவர் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஒரு வழியாக இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. அடுத்த வாரம் கிராண்ட் ஃபினாலே வாரம் என்கிற நிலைமையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
முதல் வாரத்திலேயே இந்த போட்டியாளர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒரு வழியாக வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த வாரம் எவிக்ட் ஆன பழைய போட்டியாளர்கள் வாக்கவுட் ஆன ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் உள்ளே வந்து மீண்டும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி உள்ளனர்.
படத்தை
பார்த்துட்டு
கடுப்பான
பாஸ்
நடிகர்..
கருத்து
கந்தசாமியுடன்
கைகோர்க்க
போவதில்லை
போல?

ஜிபி முத்து இருந்திருந்தால்
பிக் பாஸ் சீசன் 6ல் எவிக்ட் ஆன அத்தனை போட்டியாளர்களும் மீண்டும் வீட்டுக்குள் இந்த வாரம் வந்து ஒரே கலகலப்பாக உள்ளது. ஜிபி முத்து இந்த சீசனில் வீட்டிற்குள்ளே இருந்திருந்தால் இந்த ஷோ டிஆர்பியில் பெரிய இடத்தை பிடித்து இருக்கும். அவர் வெளியே போன பிறகு ஷோ படுத்து விட்டது என மீண்டும் ஜிபி முத்துவை பிக் பாஸ் வீட்டில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த வார நாமினேஷன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே வென்ற அமுதவாணனை தவிர அத்தனை பேரும் நாமினேட் செய்யப்பட்டனர். விக்ரமன், அசீம், ஷிவின், கதிர், மைனா நந்தினி மற்றும் ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கல் இந்த வாரம் நாமினேட் ஆன நிலையில், இந்த வாரம் மைன நந்தினி அல்லது ஏடிகே இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

டேஞ்சர் ஜோனில்
அசிம், மைனா நந்தினி மற்றும் ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருந்து வந்தனர். ஷிவின் மற்றும் விக்ரமன் அதிக ஓட்டுக்களை அள்ளி இந்த வாரமும் முதல் இரு இடங்களில் சேவ் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏடிகே எவிக்ட்
ஊர் கிழவி என நெட்டிசன்கள் மற்றும் உள்ளே போன சுரேஷ் தாத்தாவால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ராப் இசை பாடகர் ஏடிகே எனும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பணப்பெட்டி யாருக்கு
அடுத்த வாரம் கிராண்ட் ஃபினேலே வாரத்துக்குள் விக்ரமன், ஷிவின், அசீம், கதிரவன் மற்றும் மைனா அமுதவாணனை தொடர்ந்து செல்ல உள்ளனர். இதில், பிக் பாஸ் கொடுக்கப் போகும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கதிர் அல்லது மைனா இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தமே இல்லாமல் அசீம் எடுத்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.