Don't Miss!
- News
சென்னைக்கு பாராட்டு.. அதிகாரிக்கு ஆபாச திட்டு.. சிக்கலில் பீகார் ஐஏஎஸ் அதிகாரி கேகே பதாக்.. வீடியோ
- Sports
30 மீட்டர் வரை பறந்த பைல்ஸ்.. தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்.. தீயாக பரவும் வீடியோ
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆரி அர்ஜுனன் போல அப்படியொரு சீன்.. தலைவர் போஸ் கொடுக்கிறாரு என அசீமை கலாய்த்த ஏடிகே!
சென்னை: இந்த சீசனில் ஆரம்பத்திலேயே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விடுவேன் அசீம் என கமல் எச்சரித்த நிலையில், தனது விரல் வித்தை மற்றும் இமிடேட்டிங் ஆக்டிங்கை அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் அசீம்.
அசீமை வெளியே அனுப்பி விட்டாலும் ஷோவும் ஓடாது அவருக்கும் அது ஒரு பாடமாக அமையாது என கடைசி வரை அவரை உள்ளேயே வச்சி செய்து வருகிறார் பிக் பாஸ்.
அதிகமா அசிங்கப்பட்டவன் நான் தான் எனக்குத் தான் டைடிட்ல் கொடுக்கணும் என நினைத்துக் கொண்டிருக்கும் அசீமுக்கு முகத்தில் கரியை பூசுவது போல போட்டியாளர்களை வைத்து ஆப்பு அடித்து விட்டார் கமல்ஹாசன்.
Bigg Boss Tamil 6: பர்சனல் அட்டாக் செய்யும் அசீம்...வெளியான பரபரப்பு ப்ரோமோ!

கடுப்பான கமல்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அசீம் ரசிகர்கள் கமல்ஹாசனை ரொம்பவே ட்ரோல் செய்து வந்தனர். ஆரிக்கும் ரசிகர்கள் அதிகம், பாலாவுக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்தது போல இந்த சீசனில் அசீமுக்கும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், அசீம் ஆர்மியினர் கமல்ஹாசனை ட்ரோல் செய்து வருவது அறிந்து கடுப்பாகி தான் அவர் தொடர்ந்து அசீமை வச்சு செய்து வருகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

தகுதியில்லாத அசீம்
இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண தகுதியில்லாத போட்டியாளராக யாரை நினைக்கிறீங்க என கேட்டதுமே டைட்டிலுக்காக இதுவரை விளையாடி வந்த அசீமை அதிகமான போட்டியாளர்கள் சொல்ல ஆரம்பித்ததும் கண்கள் குளமாகும் அளவுக்கு கலங்க ஆரம்பித்து விட்டார் அசீம்.

வஞ்சப் புகழ்ச்சி அணி
அசீம் கோபப்படுகிறார் என்றும் குட் மார்னிங் போல மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் தப்பு பண்ணுகிறார் என சொன்ன கமல் அவருக்கு அதிகம் பேசும் திறமையும் உண்டு என பாராட்டி விட்டு பிக் பாஸிடமே ஒன்றரை மணி நேரம் பேச முடியுமா என வஞ்சப் புகழ்ச்சி அணியில் மறுபடியும் அசீமுக்கு அப்படித்து விட்டார்.

ஆரி போல
பிக் பாஸ் வீட்டுப் போட்டியாளர்கள் தொடர்ந்து வொர்ஸ்ட் போட்டியாளர் என ஆரி அர்ஜுனனை ஒவ்வொரு வாரமும் சிறையில் அடைத்து வந்த நிலையில், டென்ஷனாகி சிங்கம் போல ஆரி அர்ஜுனன் கத்தியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதே போல ஒரு சீனை அசீமும் ட்ரை பண்ண வீட்டின் நுழைவு வாயிலுக்கு முன் சென்று தனியாக நிற்க ஆரம்பித்து விட்டார்.

கலாய்த்த ஏடிகே
அசீம் என்ன பண்றாரு என ஹவுஸ்மேட்ஸ் கேட்க, தலைவர் போஸ் கொடுக்கிறாரு என ஏடிகே ஒரே ஒரு டயலாக் பேசி அசீமின் அந்த ஒட்டுமொத்த பவர்ஃபுல் சீனையும் காலி செய்து விட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.