»   »  பாகுபலி எல்லாம் ஒரு படமா, அதுக்கு ரூ. 10 கூட செலவளிக்க மாட்டேன்: பிரபல இயக்குனர்

பாகுபலி எல்லாம் ஒரு படமா, அதுக்கு ரூ. 10 கூட செலவளிக்க மாட்டேன்: பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று பிரபல மலையாளம் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


வசூலில் பல புதிய சாதனைகள் படைத்துள்ள படம் பாகுபலி 2.


அடூர் கோபாலகிருஷ்ணன்

அடூர் கோபாலகிருஷ்ணன்

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை கீது மோகன்தாஸ், நடிகர் ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பாகுபலி 2

பாகுபலி 2

நிகழ்ச்சியில் பேசிய கோபாலகிருஷ்ணன் பாகுபலி 2 படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். 1991ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான பாதாள பைரவி போன்று தான் பாகுபலி 2 என்றார் அவர்.


சினிமா

சினிமா

பாகுபலி 2 படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற படங்களை பார்க்க நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


சாதனைகள்

சாதனைகள்

உலக அளவில் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி 2 படத்தை பிரபல இயக்குனர் கடுமையாக விமர்சித்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.


English summary
Maverick film-maker Adoor Gopalakrishnan stated that Baahubali is same as the film Pathala Bhairavi, a Telugu fantasy movie, which was released way back in the year 1991. He also mentioned that Baahubali hasn't contributed anything big to the Indian film industry and he wouldn't spend even 10 Rupees to watch films like these.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil