»   »  டிவி நிகழ்ச்சிகளை பார்க்கவா முடிகிறது, கண்றாவி: பிரபல இயக்குனர் பாய்ச்சல்

டிவி நிகழ்ச்சிகளை பார்க்கவா முடிகிறது, கண்றாவி: பிரபல இயக்குனர் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாளம் தொலைக்காட்சி சேனல்களில் டிவி தொடர்கள் என்ற பெயரில் வருவதை பார்க்கவா முடிகிறது என பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

டிவி

டிவி

டிவிகளில் காட்டப்படும் மோசமான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சென்சார் செய்யப்படுவது இல்லை. ஒருவரை கொடூரமாக கொலை செய்வதில் இருந்து பல கொடூர காட்சிகளை டிவி சேனல்கள் நிகழ்ச்சிகளுக்கு இடையே ப்ரோமோவிலும் கூட காட்டுகின்றன.

மலையாளம்

மலையாளம்

டிவிகளில் கொடூர காட்சிகளை பார்த்தால் ரசிகர்களுக்கு தவறான செய்தியே கிடைக்கும். தரமற்ற நிகழ்ச்சிகளை யார் தருவது என்பதில் மலையாள டிவி சேனல்களிடையே போட்டி நடக்கின்றது. டிவிகளில் எதை வேண்டுமானாலும் காட்டலாம் என்றாகிவிட்டது.

படங்கள்

படங்கள்

நான் 12 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அதில் ஒன்றுக்கு கூட சென்சார் பிரச்சனை வரவில்லை. சொல்லப் போனால் அவற்றுக்கு சென்சாரே தேவையில்லை. திரைப்பட விழாக்களில் திரையுலக பிரபலங்களுக்காக சிறப்பு காட்சிகள் வைப்பதை வரவேற்கிறேன்.

விளம்பரம்

விளம்பரம்

நகைக்கடை விளம்பரம் ஒன்றை பார்த்து கவலை அடைந்தேன். அந்த விளம்பரத்தில் உடல் முழுவதும் நகை அணிந்திருக்கும் பெண்ணை சிறுமி ஒருவர் வியப்பாக பார்க்கிறார். சிறுமிகளை கூட நகைகள் பக்கம் ஈர்க்கும் தவறான கருத்து இந்த விளம்பரம் மூலம் பரவுகிறது.

English summary
Veteran Malayalam film director Adoor Gopalakrishnan is saddened by the derogatory content shown on televisions.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil