»   »  வளையோசை கலகலவென... கமலுடன் மீண்டும் இணையும் அமலா

வளையோசை கலகலவென... கமலுடன் மீண்டும் இணையும் அமலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 26 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் நாகர்ஜுனாவின் மனைவியும், நடிகையுமான அமலா.

டி.ராஜேந்தரின் மைதிலி என்னைக் காதலி படத்தின் மூலம் தமிழில் 1986ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் அமலா. தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு, வேலைக்காரன், அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.

ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் என்று அப்போது உள்ள டாப் நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த அமலா 1992 ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை மணந்து கொண்டார்.

After 26 Years Kamal to Pair up with Amala

தற்போது அமலாவின் மகன் அகில் அக்கினி நடிகராக தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகிறார். இதே போன்று 24 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் அமலா.

26 வருடங்களுக்குப் பின்னர் கமலுடன், அமலா நடிக்கவிருக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஜனவரி மாதத்தில் தொடங்குகிறது மேலும் மொத்தப்படத்தையும் 3 மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனராம்.

முழுப்படத்தையும் அமெரிக்காவில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகையிடமும் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

English summary
After 26 Years Kamal Haasan to Pair up With Actress Amala an upcoming Tamil-Telugu bilingual Movie, Directed by TK Rajeev Kumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil