30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் தளபதி பட பிரபலம்?: இது வேறலெவல் அப்டேட்டா இருக்கே

சென்னை: மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படம் 1991ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

ரஜினி, மம்மூட்டி இருவரும் நண்பர்களாக நடித்த இந்தப் படத்தில், அரவிந்த் சாமி நடிகராக அறிமுகமானார்.

மணிரத்னத்தின் ரோஜா மூலம் ஹீரோவான அரவிந்த் சாமி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தளபதி கலெக்டர் தம்பி

தளபதி கலெக்டர் தம்பி

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும் மம்மூட்டியும் நண்பர்களாக நடித்த 'தளபதி' திரைப்படம், 1991ல் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஷோபனா, ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தில் தான் அரவிந்த் சாமியும் நடிகராக அறிமுகமானார். கலெக்டர் அர்ஜுன் கேரக்டரில் ரஜினியின் தம்பியாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். தளபதி படத்தில் அரவிந்த் சாமி பேசிய "நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்" என்ற வசனம் இன்றுவரையும் பிரபலம்.

வில்லனாக மாறிய அரவிந்த் சாமி

வில்லனாக மாறிய அரவிந்த் சாமி

தளபதியைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தில் ஹீரோவாக நடித்த அரவிந்த் சாமி, தொடர்ந்து பல படங்களில் பிஸியானார். ரசிகைகளின் ரகசிய காதலனாக வலம்வந்த அரவிந்த் சாமி, சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். திடீரென 'தனி ஒருவன்' படத்தில் ஸ்மார்ட்டான வில்லனாக ரி என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, இப்போது மீண்டும் பிஸியாகிவிட்டார்.

ரஜினியுடன் மீண்டும் கூட்டணி

ரஜினியுடன் மீண்டும் கூட்டணி

இந்நிலையில், ரஜினியின் 170வது படத்தில் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படத்தில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தம்பி இல்லை வில்லன்

தம்பி இல்லை வில்லன்

இதனிடையே 'தலைவர் 170' படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த அரவிந்த் சாமி, இப்போது வில்லனாக நடிக்க உள்ளார். 30 ஆண்டுகளுப் பிறகு ரஜினியின் படத்தில் அரவிந்த் சாமி கமிட் ஆகியுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X