40 ஆண்டுகளுக்கு பின் கமல் எங்கு போயிருக்கிறார் தெரியுமா ?...போட்டோ வெளியிட்ட பிரபலம்

சென்னை : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று டாப் நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என இன்றைய தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து கமல் இந்த படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடி, கோவை என விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷுட்டிங், கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டன.

கமல் எங்கு போயிருக்கார் பாருங்க

கமல் எங்கு போயிருக்கார் பாருங்க

கமல் மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டதால் மீண்டும் துவங்கப்பட்ட விக்ரம் படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி தியேட்டரில் விக்ரம் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதனை வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கெளதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகா

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகா

கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு கமல் வெற்றி தியேட்டருக்கு வந்துள்ளாராம். கமல் இதற்கு முன் வெற்றி தியேட்டருக்கு வந்த பழைய போட்டோவை ராகேஷ், கமலிடம் காட்டி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த கமல், அதில் தனது கையெழுத்தை போட்டு கொடுத்துள்ளார். கமல் கையெழுத்து போட்டுக் கொடுத்த இந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அட செம தகவலா இருக்கே

அட செம தகவலா இருக்கே

அதோடு, விக்ரம் படத்தின் ஷுட்டிங்கிற்காக கமல் மீண்டும் வெற்றி தியேட்டருக்கு வந்தது மிகப்பெரிய கெளரவம், மறக்கமுடியாத தருணம். இதற்கு முன் 1979 ம் ஆண்டு கல்யாணராமன் படத்தின் 100 வது நாளுக்காக கமல் வெற்றி தியேட்டருக்கு வந்திருந்தார். தற்போது அவரை மீண்டும் இங்கு வரவழைத்ததற்காக டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் ரிலீஸ் எப்போ தெரியுமா

விக்ரம் ரிலீஸ் எப்போ தெரியுமா

மிகவும் குறைவான ஆட்களுடன் ஈசிஆரில் விக்ரம் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் முக்கிய ரோலில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான விக்ரம் படத்தை மே அல்லது ஜுன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கு முன் கோடை விடுமுறையில் விக்ரம் ரிலீசாகும் என சொல்லி வந்தவர்கள் தற்போது மே அல்லது ஜுன் மாதத்தில் ரிலீஸ் பிளானை மாற்றி வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X