Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரொம்ப நாளா ஆளவே காணோம்...எதுக்கு இந்த திடீர் ட்வீட்...பாடகி தீயால் குழம்பிய ரசிகர்கள்
சென்னை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் உறவினரான தீ, பிசா 2 படத்தில் டிஸ்கோ வுமன் பாடலை பாடி சினிமாவிற்கு அறிமுகமானவர். வித்தியாசமான குரல் வளம் கொண்ட தீ, இதுவரை சந்தோஷ் நாராயணன் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

அதற்கு பிறகு குக்கூ, மெட்ரால், இறுதிச்சுற்று, கபாலி, இறைவி, குரு, மேயாத மான், காலா, வசசென்னை, மாரி 2, பிகில் உள்ளிட்ட பல படங்களில் பாடல் பாடி உள்ளார். இவர் பாடிய ரெளடிபேபி, சூரரைப் போற்று படத்தில் வரும் காட்டுப்பயலே, ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட்ட ரகிட்ட போன்ற பட மாஸ் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
யுவன்சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் நாராயண், ஜி.வி.பிரகாஷ் போன்றவர்களின் இசையிலும் பாடல் பாடி உள்ள தீ, கடைசியாக கர்ணன் படத்தில் ஒரு பாடல் பாடி இருந்தார். கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பாடல் பாடி இருந்தாலும், தீயின் புகழை தீயாய் பரவ வைத்தது எஞ்சாயி எஞ்சாமி என்ற ஆல்பம் பாடல் தான்.
என்
பர்சனல
எதுக்கு
நோண்டுறீங்க..
அதுல
என்னங்க
சுவாரஸ்யம்..
விஜய்
சேதுபதி
காட்டம்!
எஞ்சாயி எஞ்சாமி பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் தெறிக்குரல் அறிவு, ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோருடன் சேர்ந்து தீ பாடி இருந்தார். இந்த பாடல் செம ஹிட் ஆனது. இதற்காக அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன. சர்வதேச அளவில் அதிகமானவர்களால் யூட்யூப்பில் பார்த்து, ரசிக்கப்பட்ட பாடலாக இது மாறியது.
இந்நிலையில் எஞ்சாயி எஞ்சாமி பாடலின் சாதனையை பாராட்டி, சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின் அட்டைப்படத்தில் இந்த குழுவின் போட்டோ இடம்பெற்றது. இதில் ஷான் வின்சென்ட் டீ பாலின் போட்டோ மட்டுமே இடம்பெற்றது. ஆனால் அறிவின் போட்டோ இடம்பெறவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அறிவுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பேசினர்.
இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தெருக்குரல் அறிவு விவகாரத்திற்கு பிறகு தீ, சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டவில்லை. ட்வீட் எதுவும் பதிவிடவில்லை. கடைசியாக பிப்ரவரி மாதம் தான் ட்வீட் போட்டுள்ளார். இதே போல் எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு பிறகு தீ, சினிமாக்கள் எதிலும் பாடவில்லை. ஆல்பங்களும் வெளியிடவில்லை. எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என எந்த தகவலும் இல்லை.
Recommended Video
இந்நிலையில் இன்று திடீரென ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஜுன் 26 ம் தேதி தீயின் பிறந்தநாள். இதற்காக ரசிகர்கள் சிலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தீக்கு வாழ்த்து கூறி உள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக தான் தீ இன்று மீண்டும் ட்வீட் போட்டுள்ளார். இதனால் இத்தனை மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தார். சோஷியல் மீடியா பக்கமே வராதவர் இன்று நன்றி சொல்லி ட்வீட் போட்டுள்ளாரே என குழப்பமடைந்துள்ளனர்.