ஒன்று இல்ல... பிக்பாஸில் அடுத்து டபுள் வைல்ட்கார்டு என்ட்ரி

சென்னை : பல சர்ச்சைகள், மோதல்கள், பிரச்சனைகள், போட்டிகள் என விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து விட்டது பிக்பாஸ் சீசன் 5. பாதி வழியை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறி உள்ளனர். அடுத்ததாக வெளியேற போகிறவர் யார் என்பதை முடிவு செய்வதற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் 6 பேர் நாமினேட் ஆகி உள்ளனர்.

ரீ என்ட்ரியான அபிஷேக்

ரீ என்ட்ரியான அபிஷேக்

எவிக்ஷன் மூலம் நான்காவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அபிஷேக், வைல்ட் கார்ட் என்ட்ரியாக கடந்த வாரம் மீண்டும் வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மற்றவர்களை இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார் என வெளியேற்றப்பட்ட அபிஷேக்கை எதற்காக மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரி

அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரி

இந்நிலையில் விரைவில் அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரி இன்று நடைபெற உள்ளது. இது இன்றைய ப்ரோமோவில் மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது. உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவரும், மாஸ்டர் படத்தின் நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணன் இன்றைய ப்ரோமோக்களில் இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள், வைல்ட்கார்டு என்ட்ரிக்கு தனியாக ப்ரோமோ இல்லாமல் இப்படி காட்டி விட்டீர்களே என கேட்டுள்ளனர்.

டபுள் என்ட்ரி

டபுள் என்ட்ரி

இதனால் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரி சதீஷ் தான் என்பது உறுதியாக உள்ளது. அதே சமயம் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வர போவது ஒருவர் இல்லையாம். டபுள் வைல்ட்கார்டு என்ட்ரி நடக்க உள்ளதாம்.

இவரும் வர போகிறாரா

இவரும் வர போகிறாரா

இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வர போகிற மற்றொரு பிரபலம் வேறு யாரும் இல்லை விஜய்யின் நண்பரும், டாப் சீரியல் நடிகருமான சஞ்சீவ் தானாம். இவர்கள் இருவருமே ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக ஏற்கனவே கூறப்பட்டது.

எப்போ வர போறாங்க

எப்போ வர போறாங்க

ஆனால் இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட போகிறார்களா அல்லது வேறு வேறு நாட்களில் அனுப்பப்பட போகிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம் இன்றைய ப்ரோமோவில் பள்ளி மாணவர்கள் போல் மாறிய போட்டியாளர்களுடன் சதீஷும் அமர்ந்திருப்பதால் 50 வது நாளில் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்தது இவர் தான் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X