For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிற்கவோ, நடக்கவோ முடியாது...வேதனை.. நரகம்.. கலங்க வைக்கும் யாஷிகாவின் ஹெல்த் அப்டேட்

  |

  சென்னை : கார் விபத்தில் மோசமாக படுகாயம் அடைந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், விபத்திற்கு பிறகு இன்று முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தனது உணர்வுகள் பற்றியும், உடல்நிலை குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள உடல்நிலை குறித்த தகவல் பலரையும் கலங்க வைத்துள்ளது.

  Yashika Anand First EXCLUSIVE statement | 5 மாசம் நடக்க முடியாது | Balaji Murugadoss

  ஜுலை 25 ம் தேதி நண்பர்களுடன் யாஷிகா வந்த கார் விபத்திற்குள்ளானது. இதில் ஏராளமான எலும்பு முறிவுகளுடன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவிற்கு பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுயநினைவிற்கு திரும்பி உள்ள யாஷிகா, ஐசியு.,வில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

  விரைவில் அந்த நாள்… திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை !விரைவில் அந்த நாள்… திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை !

  நிற்கவோ, நடக்கவோ முடியாது

  நிற்கவோ, நடக்கவோ முடியாது

  நாளைக்கு யாஷிகாவிற்கு பிறந்த நாள். நாளையுடன் அவருக்கு 21 வயதாகிறது. இந்த சமயத்தில் யாஷிகா ஹெல்த் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. இடிப்பு, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சர்ஜரிக்கு பிறகு ஓய்வில் இருந்து வருகிறேன்.

  படுத்த படுக்கையாகிட்டேன்

  படுத்த படுக்கையாகிட்டேன்

  நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருக்கிறேன். எந்த அசைவுமின்றி இருக்கிறேன். அனைத்தும் படுக்கையில் தான். என்னால் வலது அல்லது இடது புறமோ கூட திரும்ப முடியாது. பல நாட்கள் இப்படி தான் இருக்க வேண்டி இருக்கும். பின்புறம் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக முகத்திற்கு ஏதும் ஆகவில்லை.

  கடவுள் தண்டித்து விட்டார்

  கடவுள் தண்டித்து விட்டார்

  இது கண்டிப்பாக எனக்கு மறு பிறகு தான். எதையும் நான் கேட்க தயாராக இல்லை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயப்பட்டு, நொருங்கிப் போய் உள்ளேன். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் ஈடு செய்ய முடியாத இழப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

  ஆறுதல் சொன்ன பிரபலங்கள்

  ஆறுதல் சொன்ன பிரபலங்கள்

  யாஷிகாவின் இந்த பதிவிற்கு பிக்பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தா, சனம் ஷெட்டி, சம்யுக்தா மேனன் ஆகியோர் ஆறுதலாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சனம் ஷெட்டி தனது கமெண்ட்டில், தைரியாக இரு யாஷிகா. விபத்துக்கள் எல்லோருக்கும் நடக்கக் கூடியது தான். ஆனால் நீ அதிலிருந்து வலிமையுடன் மீண்டு வர வேண்டும். பிரார்த்தனைகளால் நீ சீக்கிரம் மீண்டு வருவாய் என குறிப்பிட்டுள்ளார்.

  நான் குடி போதையில் இருந்தேனா

  நான் குடி போதையில் இருந்தேனா

  கார் ஓட்டிய போது யாஷிகா குடிபோதையில் இருந்ததாக சிலர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பினர். இதற்கு பதிலளித்து மற்றொரு பதிவையும் பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில், சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். இது கேவலமாக வதந்தி பரப்பியவர்களுக்கு சொல்கிறேன். நாங்கள் குடிக்கவில்லை என போலீசார், டாக்டர்களே உறுதி செய்து விட்டனர். அதற்கு பிறகும் ஏன் இப்படி பரப்புகிறீர்கள்.

  காட்டமாக பேசிய யாஷிகா

  காட்டமாக பேசிய யாஷிகா

  அப்படி நான் குடிக்க நினைத்திருந்தால் பாருக்கு தான் போயிருப்பேன். இப்படி மருத்துவமனையில் இருக்க மாட்டேன். பொய்யான மனிதர்களின் இந்த போலியான செய்திகள் வெகு காலம் நீடிக்காது. ஆனால் உணர்வு ரீதியான விஷயம். கொஞ்சமாவது மனிதாபிமானம், கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். சில போலி மீடியாக்கள் இது போன்ற செய்திகளை பரப்புகிறார்கள். உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது என காட்டமாக பதிவிட்டிருந்தார்.

  இவங்க இப்படி தான்

  இவங்க இப்படி தான்

  இதற்கு கமெண்ட் செய்துள்ள வனிதா விஜயக்குமார், இதை அனைவருக்கும் நடக்கக் கூடியது தான். அதனால் தான் இது விபத்து. பிறப்பு, இறப்பு இயல்பானது. யாராலும் எதையும் மாற்ற முடியாது. நீயும் பாதிக்கப்பட்டிருக்கிறாய். அதனால் உன்னை நீயே பழிசுமத்திக் கொள்வதை நிறுத்து. மற்றவர்கள் நினைப்பதை கண்டுகொள்ளாதே. நன்றாக ஓய்வெடுத்து உன் ஆரோக்கியத்தை கவனி. இந்த கோரமான சம்பவத்தின் காரணத்தை நீ ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  I'm in bed all day. I am without any movement. Everything is in bed. Neither my right nor my left can turn back. It will have to be like this for many days. There was an injury all over the back. Fortunately nothing happened to the face, Yashika said in her Instagram post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X