ஏகே 63 அப்டேட்டா... செம உருட்டா இருக்கே...என்னம்மா கிளப்பி விடுறாங்க

சென்னை : மூன்று ஆண்டு இடைவேளைக்கு பிறகு ரிலீசாகி உள்ள அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, வெற்றிகரமாக நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆனால் வலிமை படம் ஃபிளாப். இந்த படத்தால் விநியோகஸ்தர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்று வேறு ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வலிமை படம் லாபமா, நஷ்டமா என குழுப்பம் ஏற்பட்டது. இருந்தாலும் ரசிகர்கள் அதை கண்டுகொள்ளாமல் அஜித்தின் அடுத்தடுத்த படங்களான ஏகே 61, ஏகே 62 அப்டேட்களை கொண்டாடி வருகின்றனர்.

ஏகே 61 ஷுட்டிங் எப்போ

ஏகே 61 ஷுட்டிங் எப்போ

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் ஏகே 61 படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதில் ஹரோ - வில்லன் என இரு வேடங்களில் அஜித் நடிக்க போகிறார். மார்ச் மாத இறுதியில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை துவங்கி, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ, வில்லன் ரோல்களுக்கு வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக அஜித் 25 கிலோ உடல் எடையை குறைப்பதாக வேறு சொன்னார்கள்.

ஏகே 62 அப்டேட்டும் வந்தாச்சு

ஏகே 62 அப்டேட்டும் வந்தாச்சு

ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், இதற்காக சென்னை அண்ணா சாலை போன்று செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்குவதற்கு முன்பே ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியானது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாகவும், நயன்தாரா ஹீரோயினாக நடிக்க போவதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.

ஏகே 61, ஏகே 62 அப்டேட் வருதா

ஏகே 61, ஏகே 62 அப்டேட் வருதா

ஆரம்பத்தில் ஏகே 62 தகவல் வதந்தி என கூறப்பட்டாலும் இது உண்மை தான் என சொல்லப்படுகிறது. இன்று அல்லது நாளை ஏகே 61 மற்றும் ஏகே 62 படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்கள் பல சோஷியல் மீடியாவில் உறுதி செய்து வருகின்றன. இதனால் எந்த படத்தின் அப்டேட் முதலில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னது...ஏகே 63 அப்டேட்டா

என்னது...ஏகே 63 அப்டேட்டா

இந்நிலையில் மற்றொரு புதிய தகவலாக ஏகே 63 படத்தின் அப்டேட் என்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. இதன்படி ஏகே 63 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க போகிறதாம். டைரக்டர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்க போகிறாராம். இந்த படத்தில் மிக முக்கியமான ரோலில் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது சோஷியல் மீடியாவில் பரவியதும் உண்மை தானா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். உண்மையாக இருந்தால் இது சன் பிக்சர்சிற்கு மிகப் பெரிய லாபத்தை பெற்றுத் தரும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X