Don't Miss!
- News
"கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
- Finance
அன்றே கணித்தார் எலான் மஸ்க்.. புலம்பி தள்ளும் பெரிய தலைகள்..!
- Lifestyle
சமையலறையில் இந்த பொருட்களை தவறான இடத்துல வெச்சுடாதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க..
- Sports
ஹர்திக், ஷமி நடத்திய வேட்டை.. விழிப்பிதுங்கி நின்ற நியூசி, வீரர்கள்.. 2வது ODIல் இந்தியா அபார வெற்றி
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இது என்னய்யா அஜித் பட ரீமேக்கிற்கு வந்த சோதனை?
மும்பை: வீரம் படத்தின் இந்தி ரீமேக் பற்றி தான் இந்த செய்தி.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். தி லேண்ட் ஆஃப் லுங்கி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஹத் சம்ஜி இயக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் அஜித் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

அக்ஷய் கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் வீரம் ரீமேக்கில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து அவர் யுரி படம் புகழ் விக்கி கவுஷலின் பெயரை பரிந்துரை செய்தார்.
இயக்குநரும் விக்கி கவுஷலை அணுகியபோது நான் வீரம் ரீமேக்கில் நடிக்கிறேன் என்று அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கும் டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
விக்கி பூத்: தி ஹான்டட் ஷிப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது தவிர அவர் உத்தம் சிங் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார்.
அஜித் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி நடந்து வரும் நிலையில் அவர் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கியுள்ள அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வெளியாக உள்ளது.
பாவம்யா.. சேரனுக்கு டைம்மே சரியில்ல போல.. பிக்பாஸ் வீட்டுல எல்லார்கிட்டயும் வாங்கி கட்டிக்கிறாரு!
இந்த படத்தை அடுத்தும் அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். அந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்கிறார். அஜித்தை வைத்து தமிழ் படம் எடுக்க வேண்டும் என்று மறைந்த தன் மனைவி ஸ்ரீதேவி ஆசைப்பட்டதை அவர் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அஜித் ஸ்ரீதேவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதனால் தான் ஸ்ரீதேவி ஆசைப்பட்டது போன்றே சமூக அக்கறை கொண்ட பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார் அஜித்.
நேர்கொண்ட பார்வை படம் மூலம் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.