பயந்து வருது.. கமெண்ட் பக்கத்தை க்ளோஸ் பண்ணிய ஆலியா பட்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் #AliaBhatt

மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஆலியா பட், தனது புதிய படமான சதாக் 2 படத்தின் ரிலீஸ் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நெட்டிசன்கள் ஆலியா பட் மீதும் அவரது தந்தை மகேஷ் பட் மீதும் பயங்கர கோபத்தில் உள்ளனர்.

இதனால், தனது ட்வீட்டுக்கு கீழே யாரும் கண்டபடி கழுவி ஊற்றக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமெண்ட் பக்கத்தை க்ளோஸ் செய்துள்ளார்.

சதாக் 2

சதாக் 2

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது புதிய படத்தின் OTT ரிலீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் மகள் ஆலியா பட் நடித்துள்ள Sadak 2 வரும் ஆகஸ்ட் 28ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இதில், ஆலியாவுக்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் நடிக்க வேண்டிய படம்

சுஷாந்த் சிங் நடிக்க வேண்டிய படம்

முதலில் இந்த படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில பல காரணங்களுக்காக அவரை இந்த படத்தில் இருந்து இயக்குநர் மகேஷ் பட் நீக்கினார். ரியா சக்கரவர்த்தி தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என சுஷாந்த் கோரிக்கை விடுத்ததால் அவரை நீக்கியதாக வைரலான வதந்தியை மகேஷ் பட் மும்பை போலீசாரின் விசாரணையின் போது மறுத்து இருந்தார்.

Recommended Video

Sushant Singh case Complications • Final Details
உஷாராக

உஷாராக

பாலிவுட்டில் பரவி வரும் நெப்போட்சம் சர்ச்சை காரணமாக வாரிசு நடிகர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சதாக் 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நடிகை ஆலியா பட், ரசிகர்கள், நெட்டிசன்கள் யாரும் கமெண்ட் செய்ய முடியாத அளவுக்கு கமெண்ட் செக்‌ஷனை பிளாக் செய்துள்ளார்.

வச்சு செய்யும் ரசிகர்கள்

வச்சு செய்யும் ரசிகர்கள்

ஆனால், நெட்டிசன்கள் அவ்வளவு சும்மா இந்த விஷயத்தை விடுவார்களா என்ன? #AliaBhatt என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, முகேஷ் பட் தயாரிப்பில், மகேஷ் பட் இயக்கும் படத்தில் ஆலியா பட் நடிக்கிறார் என ஒரே பட் குடும்ப படம் என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த படத்தை ரசிகர்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றும் ட்வீட் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

கதறவிடும் நெட்டிசன்கள்

கதறவிடும் நெட்டிசன்கள்

கடந்த ஆண்டு ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட அந்த படம் அங்கு தேர்வு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், சதாக் 2 படத்தை புறக்கணிப்போம் என்றும், உங்களை விட மும்பை போலீசார் நல்லா நடிக்கிறாங்க என்றும் நெட்டிசன்கள் கதறவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X