நானே வருவேன்... அடுத்தடுத்து விலகும் கேமிராமேன்கள்...என்ன தான் நடக்குது ?
சென்னை : துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து பணியாற்றினர். இந்த சகோதரர்களின் காம்போ பல வெற்றி படங்களை கொடுத்துள்ளது.
நீண்ட நாளைக்கு பிறகு இந்த காம்போ மீண்டும் இணைய உள்ளது. நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பற்றிய அறிவிப்பு 2020 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.

விலகிய கேமிராமேன்
ஆரம்பத்தில் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வார் என கூறப்பட்டது. ஆனால் பிறகு அவர் இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதில் யாமினி யஞ்னமூர்த்தி மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டது. விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

யாமினியும் விலகுவதாக அறிவிப்பு
ஆனால் தற்போது யாமினியும் இந்த படத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், டைரக்டர் செல்வராகவன் மற்றும் நானே வருவேன் டீமுடன் பணியாற்றியது நல்ல அனுபவம். நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். டீமுக்கு எனது வாழ்த்துக்கள். ஆதரவிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

நடிகராகும் செல்வராகவன்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணி காயிதம் படத்திற்கும் யாமினி தான் கேமிராமேன். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து செல்வராகவன் நடித்துள்ள இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கும் இவர் தான்
சாணி காயிதம் படத்தில் யாமினி பணியாற்றிய விதம் செல்வராகவனுக்கு பிடித்து விட்டதால், நானே வருவேன் படத்திற்கும் அவரையே கேமிராமேனாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் இவரும் நானே வருவேன் படத்தில் இருந்து விலகி உள்ளதால், இந்த படத்தின் பணிகளை தொடருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

விரைவில் ஷுட்டிங்
அடுத்த கேமிராமேன் யார் என்பதை முடிவு செய்த பிறகு நானே வருவேன் படத்தின் ஷுட்டிங் துவங்கும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செல்வராகவன் தற்போது பீஸ்ட் பட வேலைகளிலும், தனுஷுடன் மாறன், திருச்சிற்றலம்பலம் ஆகிய படங்களின் ஷுட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அந்த படங்கள் முடிந்த பிறகே நானே வருவேன் வேலைகளில் செல்வராகவன், தனுஷ் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











