கருவை கலைக்க சொன்ன மாதம்பட்டி.. தடைகளை தாண்டி பிறந்த குழந்தை.. ஜாய் கிரிஸில்டா செய்யப்போவது என்ன?

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2வதாக திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக இருக்கம் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஜாய் கிரிஸில்டா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தனது இன்ஸ்டாகிராமில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஸ்ருதி என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவை எப்படி அவர் இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என ஜாய் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa Boy
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா: இதையடுத்து, ஜாய் கிரிஸில்டா, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து வாழவில்லை, இருவரும் பிரிந்து தான் வாழ்த்து வருகிறோம் என்று சொல்லித்தான் என்னை திருமணம் செய்து கொண்டார். தன்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்வார், என் மகனிடமும் அன்பாக நடந்து கொள்வார். இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வந்தோம், இந்த வீட்டின் லீஸ் பத்திரத்தில் கூட கணவர் என அவர் தான் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

கருகை கலைக்க சொன்னார்: பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டு பல முறை கேட்டு இருக்கிறார். ஆனால், அவரின் நண்பர்கள் சிலர், வாரிசு வந்துவிட்டால், நான் சட்டப்படி மனைவியாகிவிடுவேன் என்று சொன்னதால், அவர் குழந்தை வேண்டாம் என்றார். இதனால், இதற்கு முன்பே இரண்டு முறை கருவை களைத்து இருக்கிறேன். ஆனால், இந்த முறை கருவை கலைக்க முடியாமல் போய்விட்டது. மருத்துவரிடம் அழைத்து சென்றார் நான்கு மாதம் ஆகிவிட்டதால், கலைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால், அவர் அப்செட்டாக இருந்தார். இந்த குழந்தை பிறந்தால், லீகலாக பிரச்சனை வரும் என்பதால், என் டாப், போன் அனைத்தையும் உடைத்து ஆதாரத்தை அழைத்தார். அவரின் மனநிலையை புரிந்து கொண்டு, எனக்கு என்ன நடந்தாலும் பரவில்லை இந்த குழந்தையை கலைத்துவிடுகிறேன் என்று சொன்னேன். ஆனால், ஷூட்டிங் போய்விட்டு வருகிறேன் என்று சொன்னவர், மீண்டும் வரவே இல்லை என் போனை பிளாக் செய்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

தடைகளை மீறி பிறந்த குழந்தை: இந்நிலையில் இன்று ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியாக தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து, இதற்கு மேல் தான் நீங்க தைரியமாக இருக்க வேண்டும் என பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஜாய் கிரிஸில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X