பீஸ்ட் மட்டுமல்ல டானுக்கும் இது கிடையாது... காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து, தாங்கள் நினைத்ததை போல் படம் இல்லாமல் உள்ளதாங் ஏமாந்து போய் உள்ளனர். தற்போது இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் டான் படமும் சேர்ந்து விடுமோ என ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகி வருகின்றன. வலிமை, பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. இவற்றை தொடர்ந்து கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் ஆகியன ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்பார்க்கும் பெரிய நடிகர்களின் படங்களாக உள்ளன.

அரசியல் தான் காரணமா
அஜித்தின் வலிமையை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திற்கும் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர். ஆனாலும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு மோஷன் போஸ்டர், க்ளிம்ப்ஸ், டீசர் என எதுவும் வெளியிடப்படவில்லை. ஆடியோ வெளியீட்டு விழாவும் கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதே சமயம் டிரைலர் மட்டுமே ஏப்ரல் 2 ம் தேதி வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்று, யூட்யூப்பில் சாதனை படைத்தது.

என்னது டானுக்கும் கிடையாதா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, பீஸ்ட் படத்திற்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்திற்கும் டீசர் வெளியிடப்பட போவதில்லையாம். நேரடியாக டிரைலர் தான் வெளியிட போகிறார்களாம். இதனால், ஏன் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் இப்படி செய்கிறார்கள். என்ன காரணம் என கேட்டு ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். விஜய் படத்திற்கு இல்லாததற்கு அரசியல் நெருக்கடிகள் காரணமாக சொல்லப்பட்டது சரி. ஆனால் சிவகார்த்திகேயன் படத்திற்கு என்ன ஆகி விட்டது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

குழப்பத்தில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை 10 கோடி செலவில் எடுத்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம்
அடுத்தடுத்து பல காரணங்களால், பல முறை தள்ளி வைக்கப்பட்ட டான் படம் வரும் மே 13 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ரிலீசிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் டீசர், டிரைலர், மோஷன் போஸ்டர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், டீசர் கிடையாது என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











