»   »  அரசியலுக்கு வந்தா சினிமாவுக்கு 'டூ'! - கமல்ஹாசன்

அரசியலுக்கு வந்தா சினிமாவுக்கு 'டூ'! - கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்கு போடும் கமல்?-வீடியோ

சென்னை : நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசுகளை வன்மையாக எதிர்த்து வருகிறார். முன்பு மேம்போக்காக அரசியல் பிரவேசம் பற்றிப் பதில்கள் சொல்லியவர் இப்போது அரசியலுக்கு வருவேன் எனவும், மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

தமிழ்நாட்டில் இவ்வருடம் முடிவதற்குள் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரப் போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசிவந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் இன்னும் 2 மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறியிருக்கிறார்.

After coming to politics kamal will not act in cinema

சமூகப் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத அரசின் போக்கை விமர்சித்து தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அவரது ட்வீட் பார்த்தாலே தமிழக அரசியல்வாதிகள் பலர் மெர்சலாகிறார்கள். இந்நிலையில் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு இன்று கமல் பேட்டியளித்தார்.

அதில் கமல்ஹாசன், 'அரசியலுக்கு வந்த பின் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை' என்று கூறியுள்ளார். அதோடு ரஜினியும், நானும் ஏற்கெனவே அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியிருக்கிறோம். தற்போது நிலைமை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றும் பேசியுள்ளார்.

English summary
Kamalhaasan comment on Twitter following criticism of the government's lack of social issues. KamalHassan has now said, "After coming to politics I will not act in cinema."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil