லோகேஷ் கனகராஜின் அடுத்த லைன் அப்.. கூலி கொடுத்த அடியால் வந்த மாற்றம்?.. வாழ்க்கையில் நல்லது நடக்குமா?

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. கதை, திரைக்கதை என எந்த ஏரியாவிலும் படம் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால் லோகியை பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். இனியும் எல்சியூ, ஸ்டார்டம் என லாஜிக்கை மறந்து மேஜிக்கை செய்ய பார்த்தால் சினிமா டாட்டா சொல்லிவிடும் என்று எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை கொண்டாடாதவர்களே இல்லை. அனைவருமே அவருக்கு வளமான எதிர்காலம் சினிமாவில் உண்டு என்றுதான் ஆரூடம் கூறினார்கள். அவ்விரண்டு படங்களை பார்த்துவிட்டுதான் விஜய், கமலும்கூட தங்களுக்கு படம் செய்யுமாறு லோகிக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்த அளவுக்கு முதலிரண்டு படங்களில் லோகேஷின் வேலைப்பாடுகள் தரமாக இருந்தன.

மாஸ்டர், விக்ரம்: தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கினார். அப்போதிருந்து ஆரம்பித்தது அவருக்கு போதாத காலம். பெரிய ஹீரோவை வைத்து படம் செய்தால் எல்லா இயக்குநர்களும் எதிர்கொள்ளும் பிரஷரை எதிர்கொண்டார் அவர். சில காம்ப்ரமைஸ்களையும் செய்துகொண்டார். இருந்தாலும் அவ்விரண்டு படங்களிலும் ரொம்பவெல்லாம் சறுக்கவில்லை அவர். ஓரளவுக்கு தாக்குப்பிடிக்கவே செய்தார்.

After Coolie Failure Lokesh Kanagaraj to Revive Kaithi 2 Rajinikanth Reportedly Opposes Kamal Film Collaboration
Photo Credit:

சறுக்கிய லோகேஷ்: எப்போது அவர் எல்சியூ என்ற ஒன்றை தொட்டாரோ அப்போது ஆரம்பித்தது கண்டம். திரைக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதையோடு ஒன்றி இயல்பாக வர வேண்டும். விக்ரமில் அது நிகழ்ந்தது. அதனால் எல்சியூ அந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் லியோவில் அவர் செய்தது எல்லாம் அபத்தத்தின் உச்சம். அதேபோல் பெரிய ஹீரோவுக்காக ஓரளவுக்கு காம்பரமைஸ் செய்துகொண்டால் அந்த இயக்குநர் தப்பிப்பார். ஹீரோவுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் மொரட்டு அடி விழும் என்பதற்கு லோகிதான் லேட்டஸ்ட் உதாரணம். லியோவிலும், கூலியும் அதுதான் நடந்தது.

என்ன நடந்தது?: லியோவின் கதையிலும், திரைக்கதையிலும் ஒன்றுமே இல்லை. மாறாக விஜய்யை மாஸாக காண்பிக்கிறேன் என்கிற பெயரில் சில சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து ஒப்பேத்திவிட்டார். அதே நிலைமைதான் ரஜினியை வைத்து உருவாக்கிய கூலி படத்திலும். இவை எல்லாம்தான் லோகேஷ் பலமாக சறுக்க காரணம்.

அவரது அடுத்தடுத்த லைன் அப்: அதிலும் கூலி படம் வந்ததை அடுத்து பலரும் லோகேஷை கிள்ளி எறிய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படம் கொடுத்த அடி லோகிக்கு கண்டிப்பாக பெரிய பாடத்தை கொடுத்திருக்க வேண்டும். தற்போது வரும் தகவல்கள் அனைத்தும் அதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. முக்கியமாக கமலுடன் இணையும் படத்தை லோகேஷ் இயக்க வேண்டாம் என்பது ரஜினியின் எண்ணமாம். இது லோகேஷை மேற்கொண்டு உஷ்ணமாக்கியிருக்கலாம்.

Take a Poll

அதனால்தான் உடனடியாக கைதி படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலையை ஆரம்பிக்கவிருக்கிறாராம். தனக்கு பெரிய பெயர் எடுத்து கொடுத்த ஒரு கதை தன்னை கைவிட்டுவிடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர்; இதில் மொத்த வித்தையையும் இறக்கி தன்னை ஒதுக்கியவர்களை மீண்டும் தன் பக்கம் வர வைக்க வேண்டும். அதற்கு மிக மிக முக்கியமாக ஹீரோவுக்காக காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் கதை என்ன கேட்கிறதோ, என்ன சொல்கிறதோ அதை செய்ய வேண்டும். லியோவும், கூலியும் கொடுத்த அடி கண்டிப்பாக அந்த புத்தியை இயக்குநருக்கு கொடுத்திருக்கும் என்று நம்பலாம். ஆல் தி பெஸ்ட் லோகேஷ் கனகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X